குழந்தை பாக்கியம் பெற ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு!

50

குழந்தை பாக்கியம் பெற ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு!

ஆடி மாதம் என்றாலே விஷேசம் தான். அதிலும், ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் என்று வரும் நாட்கள் அதை விட சிறப்பு வாய்ந்தவை. ஸ்ரீ ஆண்டாளின் அவதாரத் திருநாளே ஆடிப்பூரம் எனப்படுகிறது.

ஆடிப்பூர நாட்களில் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு செய்யப்படும். அம்பாள் சன்னதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடு நடைபெறும். அம்பாளை தரிசிப்பதுடன் பிரசாதமாக கொடுக்கும் வளையல்கள், குங்குமம் ஆகியவற்றை வீட்டில் வைத்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடி மாத பூரம் நட்சத்திர நாளில், சுமங்கலி பெண்களுக்கு வளையல், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலைப்பாக்கு, புத்தாடை, மஞ்சள் என்று வைத்து கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.

அம்மன் கோயில்களில் மட்டுமல்லாமல் மன்னார்குடி ராஜகோபால் சுவாமி கோயில், திருவண்ணாமலை கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னார் கோயில்களில் கிட்டத்தட்ட 10 நாட்களும், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலில் 3 நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.