கோயிலுக்கு சென்றால் இதை மட்டும் செய்யவே கூடாது!

136

கோயிலுக்கு சென்றால் இதை மட்டும் செய்யவே கூடாது!

கோவில் மிகவும் புனிதமான இடம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். கோவிலுக்கு நாம் செல்லும் பொழுது இறைவனின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என நினைத்து செல்ல வேண்டும். நினைக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்க இறைவன் அருள்புரிய வேண்டும் என்ற நினைப்பு மனதில் இருக்க வேண்டும்.

கோவிலில் நாம் ஒரு சில விசயங்களை கண்டிப்பாக செய்ய கூடாது. அவைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். கோவிலில் எவருடனும் தேவையில்லாமல் பேசுவதோ, வீண் விவாதமோ செய்ய கூடாது. கோவில் கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது. கோவிலின் உள்ளே தூங்க கூடாது.

கோவிலுக்குள் செல்லும் பொழுது தலையில் தொப்பி, துணி இவைகளை அணிந்து செல்ல கூடாது. விளக்கு இல்லாமல் அதாவது விளக்கு எரியாத பொழுது வணங்க கூடாது. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்ட கூடாது. குளிக்காமல் கோவிலுக்குள் செல்ல கூடாது. கோவிலின் உள்ளே மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது. கோவில் படிகளில் உட்கார கூடாது.

சிவபெருமான் கோவில்களில் அமர்ந்து வர வேண்டும். பெருமாள் கோவில்களில் அமர கூடாது. கோவிலை வேகமாக வலம் வர கூடாது. கிரகணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்கக்கூடாது