கோயிலுக்கு சென்று இப்படி மட்டும் சொல்லாதீர்கள்!

120

கோயிலுக்கு சென்று இப்படி மட்டும் சொல்லாதீர்கள்!

மன நிம்மதிக்காக கோயிலுக்கு செல்வோம். சிலர், வாழ்க்கையில் இது வேண்டும், அது வேண்டும் என்று வேண்டிக் கொள்ள கோயிலுக்கு செல்வார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பிரார்த்தனைக்காக கோயிலுக்கு செல்வோம் அல்லவா. இதுவரை எப்படியோ, இனிமேல் இதுபோன்று செய்யாதீர்கள். கோயில்களுக்கு சென்று குறைகளை சொல்லாதீர்கள். அப்படியே நடக்கட்டும். இதுதான் இறைவன் வழங்கும் ஆசிகளாகும்.

அதாவது, நீங்கள் கோயிலுக்கு சென்று நான் ஏழ்மையில் இருக்கிறேன் வறுமையில் வாழ்கிறேன். பணம் இல்லை, வீடு இல்லை, திருமணம் ஆகவில்லை, நோய் நீங்கவில்லை, உன்னை அனுதினமும் வணங்கி வருகிறேன் எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? என்று புலம்பிக்கொண்டிருப்போம். அப்போது அனைத்திற்கும் இறைவன் அளிக்கும் ஒரே பதில் அப்படியே நடக்கட்டும் என்பது தான். இதன் மூலம் உங்களது சோதனைகள், கஷ்டங்கள் யாவும் தொடரும்.

இறைவனிடம் நம்பிக்கையுடன் சரணாகதி அடையுங்கள் சொந்த வீடு தந்தாய், நல்ல மனைவி, நல்ல பிள்ளைகளை தந்தாய், நான் நன்றாக இருக்கிறேன், இனியும் நன்றாக இருப்பேன், நல்ல வேலை எனக்கு  கிடைக்கும் உனது ஆசிகளால் கார், நிலம், வீடு  வாங்குவேன்.

அடுத்த வருடத்துக்குள் எனக்கு திருமணம் நடக்கும், தம்பதி சமேதராய் உனது சந்நதிக்கு நாங்கள் வருவோம். உனது அருளால் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். எங்கள் கடன்களை விரைவில் அடைத்து விடுவோம். இதுபேன்ற நேர்மறை எண்ணங்களை கொடுப்பதால் விரைவில் நல்லது நடப்பதை கண்கூட காணலாம்.

ஓம் நமசிவாய…!