சந்திர தரிசனம் செய்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா?

10

சந்திர தரிசனம் செய்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா?

சந்திர தரிசனம் செய்தால் மன நிம்மதி கிடைக்கும். எந்தவொரு குழப்பமான சூழ்நிலையிலும் கூட சுலபமாக தீர்வு கிடைக்கும். இப்படி இருக்க இன்று மாலை சந்திர பகவானை தரிசனம் செய்தால் நம் மனதில் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும். சந்திர பகவானை எப்படி முறையாக வழிபட வேண்டும் என்பதைப் பற்றியும், குறிப்பாக எந்த நட்சத்திரக்காரர்கள் இந்த தரிசனத்தை செய்தால் முக்தி பெறும் அளவிற்கு பலன் கிடைக்கும் என்பது குறித்தும் இந்தப் பதிவில் காண்போம்.

ஏழைய எளியோருக்கு தானம் கொடுக்க வேண்டும். இன்று செய்யும் தானம் 100 மடங்கு பலன் தரும். இன்று மாலை வீட்டு மொட்டை மாடியிலோ, வெளியிலோ சென்று சந்திரனை தரிசனம் செய்ய வேண்டும். வெறும் கையோடு சந்திரனை தரிசனம் செய்ய கூடாது. பச்சரிசி சிறிதளவு எடுத்து கொண்டு அது மீது மண் அகல் விளக்கு தீபம் ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

அதுவும், இறைவனிடம் யாசகம் கேட்பது போன்று வேண்டுதல் வைத்தால், அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் தொடர்ந்து ஆயிரம் முறை சந்திர பகவானை, மூன்றாம் பிறை அன்று தரிசனம் செய்து வந்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் முக்தி கிடைத்து விடும். அனைவரும் இந்த சந்திர தரிசனத்தை தவறவிடாமல், வழிபாடு செய்து பலன் பெற வேண்டும்.