சனி அமாவாசை: இந்த 4 தீபம் ஏற்றினால் நீங்கள் தான் கோடீஸ்வரர்!

83

சனி அமாவாசை: இந்த 4 தீபம் ஏற்றினால் நீங்கள் தான் கோடீஸ்வரர்!

மற்ற நாட்களைக் காட்டிலும், அமாவாசை நாளுக்கென்று ஒரு தனி சிறப்பு உண்டு. குல தெய்வ அருளை பெற வேண்டும் என்பதாக இருந்தாலும், பித்ருக்களின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும் என்றாலும், மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும் என்றாலும் இந்த நாளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. எல்லாருடைய ஆசீர்வாதத்தையும் ஒரு சேர பெறுவது பாக்கியம் தானே! நாம் எல்லோருடைய வீடுகளிலும் கண் திருஷ்டியை கூட, பெரும்பாலும் அமாவாசை தினத்தன்று தான் கழிப்போம்.

இப்படியாக பலவகையான நன்மைகளை தரக்கூடிய இந்த தினத்தில் மகாலட்சுமியை நினைத்து, நாம் ஏற்றப்படும் இந்த நான்கு தீபத்திற்கும் பலன் அதிகமாகவே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தன்று இந்த தீபத்தை தொடர்ந்து ஏற்றி வரும் பட்சத்தில், உங்கள் வீட்டில் இருக்கும் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அது சுலபமாக தீருவதற்கு ஒரு வழி கிடைத்து விடும். தொழிலில் முட்டுக் கட்டையாக இருக்கும் தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். வீட்டில் இருக்கும் சண்டை சச்சரவுகள் தீர்ந்து சந்தோஷம் அதிகரிக்கும். தேவையற்ற மனக்குழப்பங்கள் நீங்கும். கடன் தொல்லை குறையும். ஆரோக்கியம் அதிகரிக்கும். இப்படி ஒரு அமைதியான சூழ்நிலையில் நாம் செய்யும் எந்த வேலையாக இருந்தாலும் அது நிச்சயம் வெற்றியில் தான் போய் முடியும். லாபம் அதிகரிக்கும்.

ஆரோக்கியமான, மன நிம்மதியான, அளவான வருமானம் இருந்தாலே அது கோடீஸ்வர வாழ்க்கைக்கு சமம். நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி தானே!. உங்களை வாழ்க்கையை கோடீஸ்வரராக்கும் இந்த தீபத்தை எப்படி ஏற்றலாம், என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உங்களது வீட்டில் மொட்டை மாடி இருந்தால், இந்த தீபத்தை கட்டாயம் மாடியில்தான் ஏற்றவேண்டும். மொட்டைமாடி வசதி இல்லாதவர்கள் வீட்டின் வெளிப்புறத்திலோ அல்லது பால்கனியிலோ, தீபத்தை ஏற்றலாம். ஏனென்றால், இந்த தீபம் அமாவாசையின் இருட்டு படும்படி ஏற்றினால் மட்டுமே பலன் தரும்.

தீபத்தை தரையில்தான் ஏற்றப் போகின்றோம். முதலில் தண்ணீர் தெளித்து தரையை துடைத்துக் கொள்ளவேண்டும். இதற்கு தேவையான பொருட்கள் 4 கைப்பிடி அளவு பச்சரிசி, 4 புதிதாக வாங்கப்பட்ட மண் அகல் தீபம், விளக்கேற்ற சுத்தமான பசு நெய், விளக்கு திரி, ஒரு ரூபாய் நாணயம் 4, சிறிதளவு சிகப்பு பட்டு துணி. முதலில் பச்சரிசியை ஒவ்வொரு கைப்பிடியாக எடுத்து, நான்கு பகுதிகளாக தரையில் வைத்துக்கொள்ளவும். அகல் தீபங்களை மஞ்சள் குங்குமம் வைத்து, பச்சரிசியின் மேல் பகுதியில் வைத்து, நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி விட வேண்டும். இந்த நான்கு தீபங்களும் கிழக்கு பக்கம் நோக்கித்தான் ஏற்றப்பட வேண்டும். (நான்கு தீபங்களும் தனித்தனியாக, பச்சரிசியின் மேல் வைத்து ஏற்றப்பட வேண்டும்.)இந்த நான்கு தீபங்களின் அருகிலும் 1 ரூபாய் நாணயங்களை வைத்து விடுங்கள். நீங்கள் ஏற்றப்படும் இந்த தீபமானது, கட்டாயம் அமாவாசை இருள் படும்படி தான் ஏற்ற வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரம் தீபம் எரிய வேண்டும்.

உங்களுடைய மொட்டை மாடியில் இந்த தீபத்தை ஏற்றினால் நான்கு திசைகளிலும் நான்கு தீபத்தை வைத்துக்கொள்ளலாம். இடவசதி இல்லாதவர்கள் 4 தீபத்தையும் சதுர வடிவில் வைத்து ஏற்றுக் கொள்வது சிறப்பானது. இந்த தீபங்களை இரவு முழுவதும் அப்படியே திறந்தவெளியில் விட்டு விட வேண்டும். மறுநாள் காலை எழுந்து சிறிதளவு மஞ்சள் கரைத்த நீர் தெளித்து, விளக்கின் அருகில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து, சிகப்பு பட்டு துணியில் முடிச்சாக கட்டி, நீங்கள் பணம் வைக்கும் இடத்திலோ, அல்லது பூஜை அறையிலோ வைத்துக் கொள்ளலாம்.

அடுத்த அமாவாசை வரும் வரை இந்த முடிச்சு அப்படியே இருக்க வேண்டும். அடுத்த அமாவாசைக்கும் தொடர்ந்து இந்த பரிகார முறையை பின்பற்றி, பழைய ரூபாய் நாணயத்தை ஏதாவது கோவில் உண்டியலில் போட்டுவிட்டு, புதிய ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை இத்தனை மாதம் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களது பிரச்சினையை பொறுத்துதான் பரிகாரமும் செய்யப்பட வேண்டும். எளிதில் தீரக்கூடிய பிரச்சினையாக இருந்தால், மூன்று மாதங்கள் பரிகாரம் செய்தால் போதும். தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்தால் 7 மாதங்கள் வரை இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்தால் நல்ல பலனை அடையலாம். இந்த பச்சரிசியையும், அகல் தீபத்தையும் தொடர்ந்து எல்லா அமாவாசைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் மாற்றினால் போதும். தொடர்ந்து ஒரு சுபகாரியம் தடைபட்டு கொண்டிருக்கிறது அல்லது ஒருவருக்கு வேலை தேடுவதில் தொடர் தோல்வி இப்படிப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் கூட தங்கள் கைகளில் இந்த முடிவினை எடுத்து சென்றால், சென்ற காரியம் கட்டாயம் வெற்றி தான். அமாவாசை தினத்திற்கு என்றும், அமாவாசை இருளிலுக்கென்றும் ஒரு தனி சக்தி உண்டு என்பதை இந்த தீபத்தை ஏற்றி பயன் பெற்றால் மட்டுமே உங்களால் உணர முடியும்.