சனி மஹா பிரதோஷம் தரும் சிறப்பு பலன்கள்!

180

சனி மஹா பிரதோஷம் தரும் சிறப்பு பலன்கள்!

சனிக்கிழமையும் பிரதோஷமும் ஒன்றாக வந்தால் அது தான் சனி பிரதோஷம் என்றும் சனி மஹா பிரதோஷம் என்றும் கூறப்படுகிறது. ஜாதகத்தில் எந்த கிரகத்தின் தசா புத்தி (அதாவது சந்திர தசை, சூரியன் தசை, சுக்கிரன் தசை என்று சொல்வோம்) நடந்தாலும் சனி பிரதோஷம் தினத்தன்று சிவன் மற்றும் நந்தி பகவானை வழிபாடும் செய்யும் போது சனி பகவானையும் வழங்க வேண்டும். அவ்வாறு வழிபடும் போது அனைத்து கிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக இந்த காலகட்ட த்தில் அதிக பாதிப்புகளை அனுபவித்து வரும் தனுசு ராசிக்காரர்கள், சனி தசை, புத்தி நடப்பவர்கள் சனி பகவானால் ஏற்பட்ட பாதிப்பு நீங்க சனி மஹா பிரதோஷ நாளில் சிவன் கோயிலுக்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்ய வேண்டும். சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் சிவனை வழிபாடு செய்தால் கிட்டத்தட்ட 120 வருடம் சிவ ஆலயம் சென்ற பலன் கிடைக்கும்.

சனி மஹா பிரதோஷம் தரும் சிறப்பு பலன்கள்:

ஜென்ம ராசி மற்றும் ஜென்ம லக்கினத்தில் சன் பகவான் பயணம் செய்யும் தனுசு ராசி மற்றும் தனுசு லக்கினகாரர்கள். இவர்களுக்கு 7ஆம் வீடாக வரும் மிதுன ராசியை தனது சம சப்தம பார்வையால் பார்க்கிறார்.

இதே போன்று மிதுனம் ராசி மற்றும் மிதுனம் ராசிக்காரர்களுக்கு களத்திர ஸ்தானம் எனப்படும் 7ஆம் வீடான தனுசு ராசியில் பயணம் செய்து தனது சம சப்தம பார்வையால் பார்க்கிறார்.

சனி பகவான் தனது திரிகோண பார்வையால் மேஷம், மிதுனம், கன்னி, சிம்மம், கும்பம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். குரு இருக்கும் இடமும், சனி பார்க்கும் இடமும் பாழ் என்று கூறுவார்கள். ஆகையால், மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம் ராசிகளை 2ஆம் வீடுகளாக கொண்ட ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசி மற்றும் லக்கினக்காரர்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும்.

ஜாதகத்தில் கணவன் – மனைவி இருக்கும் இடத்தை குறிப்பது களத்திர ஸ்தானம் எனப்படும் 7ஆம் வீடு. எனவே, மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம் ராசிகளை 7ம் வீடுகளாக கொண்ட துலாம், தனுசு, கும்பம், மீனம், மிதுனம், சிம்மம் ராசி மற்றும் லக்கினக்காரர்கள் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இந்த சனி மஹா பிரதோஷத்தில் ரிஷபாரூடரை வணங்குவது நல்லது.

எனவே 12 ராசி மற்றும் லக்கினக்காரர்கள் இந்த சனி மஹா பிரதோஷத்தில் வணங்குவது தான் சிறப்பு.