சனீஸ்வரரை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?

133

சனீஸ்வரரை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?

சனீஸ்வர பகானை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது. முதலில் சனியை ஈஸ்வரன் என்று சொல்வது தவறு. சனைஸ்சரன் என்ற வார்த்தைதான் மருவி சனீஸ்வரன் என்றாகி விட்டது. சனைஸ்சரன் என்ற சொல்லுக்கு மெதுவாக நகர்பவன் என்று பொருள். நவகிரகங்களை கடவுளர்களாக பாவித்து வணங்க வேண்டிய அவசியம் இல்லை. இறைவன் இட்ட பணியை சரிவரச் செய்யும் ஏவலாட்களே நவகிரகங்கள்.

ஆலயத்தில் கூட அவர்களை பரிவார தேவதைகளாகத்தான் பிரதிஷ்டை செய்து வைத்திருப்பார்கள். சனி, இராகு, கேது மட்டுமல்ல குரு, சுக்கிரன் உள்பட எந்தக் கோள்களையும் வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது. அது நல்லதல்ல. ஆலயத்தில்கூட முதலில் மூலவரை வணங்கிய பின்புதான் பரிவார தேவதைகளான நவகிரகங்களுக்கு விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும்.

பொதுவாகவே நவகிரகங்களை நாம் சுற்றக்கூடாது. நவகிரகங்கள் தானாகவே இயங்கி நம்மை சுற்றுபவை என்பது குறிப்பிடத்தக்கது.