சமையலறையில் இப்படி செய்தால் பணக் கஷ்டம் வரும்!

133

சமையலறையில் இப்படி செய்தால் பணக் கஷ்டம் வரும்!

நம்முடைய வீட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் தான் கஷ்டம் என்பது அர்த்தமில்லை. பணக் கஷ்டத்தை விட, அதிகப்படியான சங்கடங்களை கொடுப்பது, மனக்கஷ்டம். தேவையில்லாத சண்டை சச்சரவுகள், ஒரு வீட்டில் கட்டாயம் இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு வீட்டை, பணக்கஷ்டம் இல்லாமலும், மன கஷ்டம் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, கட்டாயம் அந்த வீட்டு குடும்பத் தலைவியிடம் உள்ளது.

ஆக, குடும்பத் தலைவியாக இருக்கும் அந்த வீட்டு பெண், சமையலறையில் தன்னை அறியாமல் கூட, இப்படிப்பட்ட சில தவறுகளை செய்யக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். அது என்னென்ன தவறு என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பால் அடுப்பிலிருந்து அடிக்கடி, பொங்க கூடாது. சில பேர் வீடுகளில் தினம்தோறும் காபி டீ போடும்போது, அந்த பாலை அடுப்பிலிருந்து பொங்க விட்டு, நெருப்பில் கருகிய வாடயை உண்டாக்கி விடுவார்கள். இது வீட்டிற்கு அபசகுணம் என்று சொல்லப்பட்டுள்ளது. புதுமனை புகுவிழாவில் மட்டும்தான், பால் பொங்க வேண்டும். மற்றபடி நம் வீடுகள் அடிக்கடி பொங்க விட கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதேபோல் தான், சாதம் வேக வைக்கும் போதும் சாப்பாட்டு பானையிலிருந்து, சாதம் பொங்கி நெருப்பில் விழுந்து, கருக ஆரம்பிக்கும் அளவிற்கு கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இது மிகப்பெரிய தவறு என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக எந்த ஒரு பொருளும் பொங்கி வழிந்து, அடுப்பில் உள்ள நெருப்பில் கருகிய வாடை வீட்டிற்குள் வரவே கூடாது.

நம் வீட்டில் வைத்திருக்கும் அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் எப்போதுமே சிதரக் கூடாது. அதாவது சில பெண்கள், எந்த டப்பாவில் இருந்து பொருட்களை எடுத்தாலும், அந்த பொருளை கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் அடிக்கடி கீழே கொட்டும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட பெண்களுக்கு, குடும்பத்தை பொறுப்போடு பார்த்துக்கொள்ளும் திறமையும் இருக்காது என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. சமையலில் இருக்கக்கூடிய பாத்திரங்களை நாம், கையாளுவதில் இருக்கக்கூடிய பொறுப்பு தான், நம் குடும்பத்தை ஆள்வதிலும் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

சில பேர் வீடுகளில் சாதம் வடிக்க, குழம்பு வைக்க, காய் செய்ய, சாப்பிட பயன்படுத்த கூடிய தட்டு முதற்கொண்டு, கரண்டி வரை உள்ள பாத்திரங்கள் அனைத்தும் தேய்ந்து போய், ஆங்காங்கே விரிசல் விட்டு, மேடும் பள்ளமுமாக இருக்கும். இப்படியாக மிக மிகப் பழமையான பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அந்த பாத்திரத்தை தொடும் போது நம் கை காயம் ஆகும். அந்த அளவிற்கு மோசமாக இருக்கும். சில வீடுகளில் சமைக்கப் பயன்படுத்தக் கூடிய பழைய பாத்திரங்களை எல்லாம், பல வருடக் கணக்கில், மாற்றாமல் அப்படியே வைத்திருப்பார்கள். இது மிகவும் தவறு என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்கள் வீட்டில் புதிய பாத்திரங்கள் இருக்கும். மூட்டையாக கட்டி, அட்டாணியில் வைத்திருப்பார்கள். தயவுசெய்து பழைய பாத்திரத்தை மாற்றிவிட்டு, புதிய பாத்திரத்தை எடுத்து பயன்படுத்துங்கள்.