சாத்தானை வெளியேற்றும் பச்சை கற்பூர பூஜை!

184

சாத்தான் இருந்தால் வீட்டிற்கு தெய்வங்கள் வராது!

எவ்வளவு தான் வீடு சுத்தமாக இருந்தாலும், வீட்டில் சாத்தான் இருக்கத்தான் செய்யும். சாத்தான் இருக்கும் வீடுகளில் தெய்வங்கள் வராது. பொதுவாக வீடு என்றாலே இறை சக்தி இருக்க வேண்டும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும். இறை சக்தி இல்லாத வீடுகளில் சாத்தான் தான் குடி கொண்டிருக்கும். வீட்டில் பிரச்சனை, நோய், நொடி, கஷ்டம், நிம்மதியின்மை இப்படியெல்லாம் இருந்தால் அது சாத்தானின் வேலையாகத்தான் இருக்கும்.

சரி, இதற்கெல்லாம் என்ன செய்ய வேண்டும்? இறைவனை எப்படி வீட்டிற்கு அழைப்பது? என்றெல்லாம் கேட்குறீங்களா? இதோ அதற்கான வழி…இதனை பின்பற்றி வந்தால் நிச்சயமாக உங்களது வீடுகளில் இறைவன் குடி கொள்வார்….

காலையில் எழுந்தவும் குளித்து முடித்துவிட்டு, வீட்டு பூஜையறையில் ஒரு தாம்பூலத் தட்டில் பன்னீர் ஊற்றி, சிவப்பு சந்தனத்தை கரைத்து கொள்ள வேண்டும். அதில், ஒரு வெற்றிலையை வைத்து அது மேலே ஒரு பச்சை கற்பூரம், கூடவே ஒரு சாதாரண கற்பூரம் வைத்து இரண்டையும் ஏற்றுங்கள். இதனை அப்படியே வைத்து விடுங்கள்.

சூடம் எரியும் போது வருகின்ற புகையின் போது அப்படியே பூஜை அறையிலேயே அமர்ந்து இறைவனை நினைத்து மனதார வீட்டிற்கு அழைத்து வழிபடுங்கள். சூடம் எரிந்து முடிந்ததும், அந்த ஆரத்தி தட்டை எடுத்துக் கொண்டு அப்படியே வாசலின் முன் கொட்டி விடுங்கள்.

பூஜையறையில் ஏற்றும் பச்சைக் கற்பூரம், சிவப்பு சந்தனம், வெற்றிலை, பன்னீர் வாசத்திற்கு வீட்டிலிருந்து சாத்தான் வெளியேறிவிடும். சாத்தான் வெளியேறிவிட்டாலே தெய்வங்கள் வீட்டிற்கு தானாக குடியேறும். வீட்டில் தெய்வங்கள் குடியேறிவிட்டால் எந்த வித பிரச்சனையும் வராது. கஷ்டம் இல்லாமல் நிம்மதியாக சந்தோஷமாக வாழலாம்.

இதனை நீங்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்து வழிபட வேண்டும்.