சாம்பிராணி புகை போடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

123

சாம்பிராணி புகை போடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

வீடுகளில் தினமும் பூஜை செய்யும் போது சாம்பிராணி புகை போடுவது வழக்கம். பிறந்த குழந்தையை கூட குளிக்க வைத்து அந்த குழந்தைக்கு தலை முதல் கால் வரையிலும், ஏன் குழந்தை தூங்கும் தொட்டிலுக்கு அடியிலும் சாம்பிராணி புகை போடுவார்கள்.

சாம்பிராணி புகை போடுவது என்பது வீடுகளில் ஹோமம் செய்வதற்கு இணையானதாக கருதப்படுகிறது. சாம்பிராணியிலிருந்து வரும் புகை ஹோமத்தில் இருந்து வரும் புகைக்கு இணையான பல நல்ல பலன்களைக் கொடுக்கும்.

சரி, என்னென்ன கிழமைகளில் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…

ஞாயிறு: இந்த கிழமைகளில் சாம்பிராணி புகை போடுவதால், ஆத்ம பலன் கிடைக்கும். அதோடு, சகல செல்வாக்கும் உயர்வதோடு பேரும் புகழும் கிடைக்கும். ஈஸ்வரன் அருள் கிடைக்கும்.

திங்கள்: இந்த கிழமைகளில் சாம்பிராணி புகை போடுவதால், மன நிம்மதி, தேக ஆரோக்கியம் கிடைக்கும். அம்பாளின் அருள் கிடைக்கும்.

செவ்வாய்: இந்த கிழமைகளில் சாம்பிராணி புகை போடுவதால் எதிரிகளின் போட்டி, பொறாமை, தீய எதிர்மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், கடன் நிவர்த்தியாகும். அதோடு, இந்த நாளில் முருகனின் அருள் கிடைக்கும்.

புதன்: இந்த கிழமைகளில் சாம்பிராணி புகை போடுவதால் நம்பிக்கை துரோகம், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சூழ்ச்சிகளிலிருந்து தப்பித்தல் ஆகிய பலன்கள் கிடைக்கும். அதோடு, சுதர்சனரின் அருள் கிடைக்கும்.

வியாழன்: இந்த கிழமைகளில் சாம்பிராணி புகை போடுவதால் சகல சுப பலன்கள் கிடைக்கும். பெரியோர்கள், குருமார்களின் ஆசி கிடைக்கும். சித்தர்களின் மனம் குளிரும்.

வெள்ளி: இந்த கிழமைகளில் சாம்பிராணி புகை போடுவதால் லட்சுமி கடாட்சம், சகல காரியங்களும் சித்தியாகும்.

சனி: இந்த கிழமைகளில் சாம்பிராணி தீபம் போடுவதால் சோம்பல் நீங்கும். சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் அருள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.