சாளக்கிராம கல்லை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்!

132

சாளக்கிராம கல்லை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்!

சிவலிங்கம் எப்படி சிவபெருமானின் தோற்றமாக இருக்கிறதோ, அதே போன்று திருமாலின் திருக்கோலமாக சாளக்கிராம கல் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த சாளக்கிராம கல்லை கண்ணனாக பாவித்து வழிபடுவர்களின் எண்ணிக்கை அதிகம். இயற்கையாகவே இந்தக் கல்லில், திருமாலுக்கு ஆயுதமாக இருக்கும் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இதுவும், இந்த கல்லை வழிபடுவதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த சாளக்கிராம கல்லை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…

  1. தினந்தோறும், சாளக்கிராம கல்லை பூஜித்து வந்தால் மனம் தெளிவு பெறும். தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் இந்த கல்லை பூஜித்து வந்தால் விஷ்ணுவாக மாறிப்போவார்கள் என்பது ஐதீகம்.
  2. கொலை செய்த பாவத்தைக் கூட நீக்கும் சக்தி சாளக்கிராம கல்லிற்கு உண்டு. அந்த கல்லை பூஜை செய்தாலோ, தரிசனம் செய்தாலோ மட்டுமின்றி அந்த கல்லைப் பற்றிய சிந்தனை வந்தாலே நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
  3. சாளக்கிராம கல்லை வழிபடுபவர்களுக்கு எம பயம் வரவே வராது. அந்த சாளக்கிராம கல்லிற்கு சந்தனம், குங்குமமிட்டு, மலர் சூடி, தீபம் ஏற்றி, நைவேத்தியம் படைத்து வழிபட்டு வந்தால், அவர்களுக்கு விஷ்ணு லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
  4. விஷ்ணு பகவானின் சஹசர நாமத்தை படித்தபடியே சாளக்கிராம பூஜை செய்தால் அவர்கள் விஷ்ணு பகவானின் திருவடியை அடைவார்கள் என்பது நம்பிக்கை.
  5. ஒருவர், பக்தியில்லாமல் கல்லாக நினைத்து சாளக்கிராம கல்லை வழிபட்டாலும் சரி, எதிர்பாராத விதமாக அந்த சாளக்கிராம கல்லை பூஜிக்க நேர்ந்தாலும் சரி, அவருக்கு சாளக்கிராம கல் வழிபாட்டினால் முக்தி உண்டு.
  6. முக்தி பெறுவதற்கு அந்த யாத்திரை செய்யனும், இந்த ஹோமம் செய்யனும் அப்படி என்று எதுவுமில்லை. சாளக்கிராம கல்லிற்கு செய்யப்பட்டும் அபிஷேக தீர்த்தத்தை தலையில் தெளித்துவிட்டு பருகினாலே புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் வந்து சேரும். அதோடு முக்தி அடையாலம்.
  7. 12 சாளக்கிராம கல்லை கொண்டு வழிபாடு செய்தால் 12 கோடி சிவலிங்கங்களை வைத்து 12 கல்ப காலம் பூஜை செய்த பலன் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.