சிவனின் வேறு பெயர்களும், அதற்கான விளக்கங்களும் பார்ட் 4!

87

சிவனின் வேறு பெயர்களும், அதற்கான விளக்கங்களும் பார்ட் 4!

சிவபெருமானின் பல்வேறு பெயர்கள் அவரது பரிமாணங்களின் குறியீடாக திகழ்கிறது. சிவபெருமானுக்கு எண்ணிலடங்காத வடிவங்களும், வெளிப்பாடுகளும் இருக்கிறது. அப்படி இருந்தாலும், அவரை, 7 பிரிவுகளில் வகைப்படுத்தலாம். ஈஸ்வரா, ஷம்போ, சம்பலேஸ்வரா, தட்சிணாமூர்த்தி, நடேசன், சோமசுந்தரர், காலபைரவர் ஆகிய அடிப்படையான 7 வடிவங்களை வைத்து பல்லாயிரக்கணக்கான வெளிப்பாடுகளை நாம் வருவிக்க முடியும். சரி, இந்தப் பதிவில் நாம், சிவனின் 108 பெயர்களும், அதற்கான விளக்கங்களும் குறித்து 4ஆவது பதிவான இந்த பதிவில் பார்ப்போம்….

சிவபெருமானின் 108 பெயர்களும், அதற்கான விளக்கமும் பார்ட் 1!

 1. நடராஜா – நடனக் கலையின் அரசன்.
 2. நாகபூஷணா – பாம்புகளை ஆபாரணமாக அணிந்தவன்.
 3. நித்யசுந்தரா – எப்பொழுதும் அழகானவன்.
 4. நிருத்யப்ரியா – நடனங்களின் காதலன்.
 5. நீலகண்டா – நீல நிற கழுத்தை உடையவன்.
 6. ஓம்காரா – ஓம்-ஐ படைத்தவன்
 7. பஞ்சாட்சரன் – வீரியமுடையவன், ஐந்தெழுத்தைக் கொண்டவன்.
 8. பரமேஸ்வரன் – கடவுள்களிலெல்லாம் முதலானவன்.
 9. பசுபதி – வாழும் உயிர்க்கெல்லாம் அரசன்.
 10. பரம்ஜ்யோதி – மிகப் பெரும் ஒளி.
 11. பாலன்ஹார் – அனைவரையும் காப்பவன்
 12. பினாகின் – கையில் வில்லை ஏந்தி இருப்பவன்
 13. ப்ரணவா – ஓம் என்னும் மூல மந்திரத்துக்கு மூலமானவன்
 14. பிரியபக்தா – பக்தர்களின் விருப்பமானவன்
 15. பிரியதர்ஷனா – அன்பான பார்வை உடையவன்
 16. புஷ்பலோச்சனா – பூக்களைப் போன்ற கண்களை உடையவன்
 17. புஷ்கரா – போஷாக்கு அளிப்பவன்
 18. ரவிலோச்சனா – சூரியனைக் கண்ணாக கொண்டவன்
 19. ருத்ரா – கர்ஜிப்பவர்
 20. சனாதனா – முடிவில்லா கடவுள்
 21. சர்வாச்சார்யா – உச்ச ஆசிரியர்
 22. சர்வஷிவா – முடிவில்லா கடவுள்
 23. சதாசிவா – எல்லைகளைத் தாண்டியவர்
 24. சர்வதாபனா – எல்லோருக்கும் முன்னோடியாக இருப்பவர்
 25. சர்வயோனி – எப்போதும் தூய்மையானவர்
 26. சர்வேஷ்வரா – அனைவரின் கடவுள்

https://swasthiktv.com/aanmeega-thagavalgal/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/