சிவனின் 9 விரதங்கள்: உமா மகேஸ்வர விரதம்!

140

சிவனின் 9 விரதங்கள்: உமா மகேஸ்வர விரதம்!

மும்மூர்த்திகளில் ஒருவர் சிவன். சைவ சமயத்தின் முழு முதல் கடவுள். பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருள் என்பதால், பரமசிவன் என்று அழைக்கப்படுகிறார். சிவன் என்பதற்கு சிவந்தவன் என்றும், வடமொழியில் சிவம் என்பதற்கு முழுமையானது, மங்களகரமானது என்று பொருள் உண்டு.

சைவர்கள் சிவபெருமானுக்கு 8 வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். மேலும், இந்த 8 வகையான விரதங்களை வழிபடுவதன் மூலமாக சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது சைவர்களின் நம்பிக்கை.

சிவனுக்குரிய 9 விரதங்கள்:

  1. சோமவார விரதம்
  2. உமா மகேஸ்வர விரதம்
  3. திருவாதிரை விரதம்
  4. மகாசிவராத்திரி விரதம்
  5. கல்யாண விரதம்
  6. பாசுபத விரதம்
  7. அஷ்டமி விரதம்
  8. கேதாரகௌரி விரதம்
  9. பிரதோஷ விரதம்

இந்த 9 முக்கியமான விரதங்களை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். தற்போது உமா மகேஸ்வர விரதம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

உமா மகேஸ்வர விரதம்:

உமா மகேஸ்வர விரதம் கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று கடைபிடிக்கப்படுகிறது.

சிவபெருமானை நினைத்து அம்மை கார்த்தை மாதம் பௌர்ணமி நாளில் மேற்கொள்ளும் விரதம் என்பதால், இது உமா மகேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த விரத நாளில் காலையில் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் சிவபெருமானுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. இந்த விரதம் கடைபிடிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். இந்த விரதம் மேற்கொள்ளும் போது உமா மகேஸ்வர மூர்த்தி வழிபடப் போடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.