சும்மா எல்லாம் விளக்கு ஏற்றக் கூடாது!

54

சும்மா எல்லாம் விளக்கு ஏற்றக் கூடாது!

பொதுவாக பெண்கள் எல்லாம் வீடுகளில் சும்மாவே விளக்கு ஏற்றி வழிபாடு செய்கின்றனர். உண்மையில், அப்படியெல்லாம் செய்யக்கூடாது. சரி, விஷயத்திற்கு வருவோம். பொதுவாக ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதம் தான்.

செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களுமே மங்களகரமான நாட்கள். அதிலேயும்,  ஆடி மாதம் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களுமே இன்னும் சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படுகிறது. பொதுவாக ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்த்தல், பால்குடம் எடுத்தல், தீமிதித்தல் என்று அனைத்தும் அம்மன் கோயில்களில் திருவிழாவாக இருக்கும்.

பொதுவாக ஒரு மாசத்த்தில் 4 வெள்ளிக்கிழமைகள் வரும். சில மாதங்களில் 5 வெள்ளி கூட வரும். இந்த மாதத்தில் 4 வெள்ளி மட்டுமே. ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விஷேசமானது. ஆடி முதல் வெள்ளி சொர்ணாம்பிகைக்கும், 2ஆவது வெள்ளி அங்காள பரமேஸ்வரிக்கும், 3ஆவது வெள்ளி அன்னை காளிகாம்பாளுக்கும், 4ஆவது வெள்ளி காமாட்சி அம்மனுக்கும் உகந்த நாள். இதுவே 5ஆவது வெள்ளியாக இருந்தால், அது வரலட்சுமிக்கு உகந்த நாள்.

இப்படி விஷேசமான ஆடி மாதத்தில் அம்மனை நினைத்து வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போது எந்த மந்திரத்தை உச்சரித்தால் அம்மனின் முழுமையான அருள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பொதுவாகவே குடும்ப பெண்கள் வீடுகளில் தங்களது குடும்பத்தின் நலனுக்காக குடும்பம் நோய், நொடியின்றி, நீண்ட ஆயுளுடன், செல்வ செழிப்போடு வாழ அம்மன் வழிபாடு செய்வார்கள். என்னதான் விளக்கு ஏற்றி பூஜை செய்தாலும் அம்மனுக்குரிய மந்திரத்தை சொல்லிக் கொண்டு பூஜை செய்தால் அதற்குரிய மகிமையே மகிமை. ஆனால், பெரும்பாலான பெண்கள் அப்படி செய்வதில்லை. இனிமேலாவது விளக்கு ஏற்றும் போது அம்மனின் மந்திரத்தை சொல்லிக் கொண்டே விளக்கு ஏற்ற வேண்டும்.

இந்த ஆடி மாதம் முழுவதும் இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு விளக்கு ஏற்றினால், வருடம் முழுவதும் அதற்கான பலனை பெற முடியும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

பெண்கள் விளக்கு ஏற்றும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் இதோ:

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே

ஜோதிமணி விளக்கே ஸ்ரீதேவி பொன்மணியே

அந்திவிளக்கே அலங்கார நாயகியே

காந்தி விளக்கே காமாக்ஷி தாயாரே

பசும்பொன் விளக்கு வைத்துப்பஞ்சு திரி போட்டுக்

குளம்போல எண்ணெய் விட்டுக் கோலமுடன் ஏற்றி வைத்தேன்

ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடி விளங்க

வைத்தேன் திரு விளக்கு: மாளிகையும் தான் விளங்க

மாளிகையில் ஜோதி உள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!

மாங்கல்ய பிச்சை மடி பிச்சை தாருமம்மா

சந்தான பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா

பெட்டிநிறைய பூஷணங்கள் தாருமம்மா

கொட்டகை நிறைய குதிரைகளை தாருமம்மா

புகழுடம்பை தாருமம்மா! பக்கத்தில் நில்லுமம்மா

அல்லும்பகலும் என்றன் அண்டையிலே நில்லுமம்மா

சேவித்து எழுந்திருந்தேன், தேவி வடிவங்கண்டேன்

வஜ்ர கிரீடம் கண்டேன், வைடூர்ய மேனி கண்டேன்

முத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்

உரி முடி கண்டேன் தாழை மடல் சூடக்கண்டேன்

பின்னல் அழகு கண்டேன் பிறை போல் நெற்றி கண்டேன்

சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன்

கமலத் திரு முகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்

மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக்கண்டேன்

கைவளையல் கலகலென்னக் கணையாழி மின்னக் கண்டேன்

தங்க ஒட்டியாணம் தகதகென்ன ஜொலிக்கக் கண்டேன்

காலிற்சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்

மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியேன் யான்

அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா

வந்த வினையகற்றி மஹா பாக்கியம் தாருமம்மா

தாயாகும் உன்றன் தாளடியில் சரணம் என்றேன்

மாதாவே உன்றன் மலரடியில் நான் பணிந்தேன்

இதனை சொல்லி முடித்தவுடன் 16 நமஸ்காரம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 16 நமஸ்காரங்கள் என்ன என்பது குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.