செல்வம், இன்பம் எல்லாமே நிலைக்க செய்ய வேண்டியவை!

16

செல்வம், இன்பம் எல்லாமே நிலைக்க இதை செய்ய வேண்டும்!

கையில வாங்குனே பையின போடல காசு போம இடம் தெரியல என்று புலம்பித் தவிப்போர் ஏராளம். வீட்டில் செல்வம், அமைதி, இன்பம் என்று அனைத்துமே தங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

 1. பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொண்டு பணம் கொடுக்கக் கூடாது. பணம் கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே அல்லது வெளியில் இருந்து கொடுக்க வேண்டும் அல்லது வாங்க வேண்டும்.
 2. பணம் கொடுக்கல், வாங்கல் என்பது செவ்வாய் கிழமைகளில் நடந்தால் உத்தமம். அப்படி செய்தால், கொடுப்பவருக்கும் பணம் திரும்ப கிடைக்கும். வாங்குபவரும் பணத்தை திரும்ப கொடுப்பார்.
 3. ஆட்டுக்கல், உரல், அம்மி, வாசல்படி இவற்றில் உட்காரக் கூடாது.
 4. வீட்டில் விளக்கு வைத்த பிறகு பால், தயிர், மோர் என்று அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது.
 5. வெற்றிலையை தரையில் வைக்க கூடாது. வாழையிழை, வெற்றிலை இவற்றை வாட விடக்கூடாது.
 6. எரியும் குத்துவிளக்கை தானாகவும், ஊதியும் அணைக்க கூடாது. பூவால் மட்டுமே அணைக்க வேண்டும்.
 7. விளக்கை மலையேற்றுதல் அல்லது அமர்த்துதல் என்று சொல்ல வேண்டுமே தவிர, அணைப்பது என்று சொல்லக் கூடாது.
 8. அரிசியை கழுவும் போது சிந்தக் கூடாது. உப்பை தரையில் கொட்டவும் கூடாது, சிந்தவும் கூடாது.
 9. வீட்டில் நெல்லி மரம் வளர்க்க வேண்டும். நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாக்‌ஷம் பெருகும் என்பது ஐதீகம். விஷ்ணு பெருமானின் அவதாரமாக நெல்லி மரம் திகழ்கிறது.
  லட்சுமி குபேரருக்கும் நெல்லி மரம் உகந்தது. நெல்லி மரம் இருக்கும் வீட்டில் தெய்வத்தில் அருள் நிறைந்திருக்கும்.
 10. துளசி மாடம் இருந்தால், தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி 3 முறை சுற்றி வர வேண்டும்.
 11. வெள்ளைப் புறாக்கள் வளர்த்து வந்தால் செல்வம் நிலைத்து நிற்கும்.
 12. பசுவிற்கு ஒரு பழம் வாங்கி கொடுக்க வேண்டும். ஒரு பழம் கொடுப்பது கோடி புண்ணியத்திற்கு சமம். ஏனென்றால், பசுக்களில் குபேரன் வாசம் செய்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமமானது.