செல்வம் குறைவதற்கான காரணங்கள் தெரியுமா?

122

செல்வம் குறைவதற்கான காரணங்கள் தெரியுமா?

  1. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றினால் கூட செல்வம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
  2. தலைமுடி தரையில் உலா வருவது.
  3. கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.
  4. ஒட்டறைகள் சேருவது.
  5. சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது, துடைப்பது, தூங்குவது.
  6. வீட்டில் சாப்பிட்ட பாத்திரங்கள், காபி கப்புகள் ஆங்காங்கே இருப்பது.
  7. பெண்கள் தினந்தோறும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
  8. ஆண்கள் புதன் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.
  9. குழாய்களில் தண்ணீர் சொட்டுவது. சுவற்றில் ஈரம் தங்குவது. செல் (கரையான்) சேருவது.
  10. பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.
  11. அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்திருப்பது, வீணடிப்பது போன்ற காரணங்களால் செல்வம் குறைய வாய்ப்பிருக்கிறது.
  12. உணவு பொருட்கள் வீணடிப்பது. இல்லை, இல்லை, வராது, வேண்டாம், வேண்டாம் ஆகிய வார்த்தைகளை அதிகளவில் உச்சரிப்பது ஆகிய காரணங்கள்.
  13. குறைந்தபட்சம் வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.
  14. உப்பு பால் சர்க்கரை அரிசி ஆகியவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.
  15. படுக்கையையும் பூஜை பொருட்களையும்   வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.
  16. வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.