செல்வம் நிலைத்து தரித்திரம் மறைய பின்பற்ற வேண்டியவை இதோ!

113

செல்வம் நிலைத்து தரித்திரம் மறைய பின்பற்ற வேண்டியவை இதோ!

  1. வாசற்படி, ஆட்டுக்கல், அம்மி, உரல் ஆகியவற்றில் உட்காரக் கூடாது.
  2. ஒருவருக்கு காசு, பணம் கொடுக்க வேண்டுமென்றால், வாசல்படியில் நின்று கொண்டு காசு கொடுக்க கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க, வாங்க வேண்டும். ஏனென்றால் வாசல் படி நரசிம்ம மூர்த்திக்கு சொந்தம்.
  3. உங்கள் வீடுகளில் லட்சுமி கடாட்சம் தழைத்து செல்வம் பெருக வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக் கூடாது. வெற்றிலையை தரையில் வைக்க கூடாது. சுண்ணாம்பு வெற்றிலையை போட கூடாது. பிரம்மசாரிகள் தாம்பூலம் உட்கொள்ள கூடாது.
  4. உப்பை தரையில் சிந்தக் கூடாது. அரிசியை கழும் போது தரையில் சிந்தவிடக் கூடாது.
  5. பகல் நேரத்தில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்க கூடாது.
  6. இரவில் வீட்டை பெருக்கினால் குப்பையை வெளியே கொட்ட கூடாது.
  7. வீட்டில் தூசி, ஒட்டடை சேர விட கூடாது.
  8. அன்னம், உப்பு, நெய் ஆகியவற்றை கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாற வேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் ஆகியவை கோ மாமிசத்துக்கு சமம்.
  9. செல்வ செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீச கூடாது. அப்படி வீசினால் பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
  10. செல்வ செழிப்போடு வாழ்வதற்கு வீட்டில் நமது ஆடைகள், துணிகள் என்று எதுவும் அங்கும், இங்குமாக சிதறி கிடக்க கூடாது. நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும், புதிய ஆடைகளை மற்றொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
  11. நமது வீட்டிற்குள் நுழைந்ததும், எப்போதும் நறுமணம் வீச வேண்டும். அப்படி இருந்தால் செல்வம் சேர துவங்கும். எங்கோ போக வேண்டிய பணம் நமது வீட்டை நோக்கி வரும். அதே சமயம் வீண் செலவுகளும் குறையும்.
  12. சாப்பிட்ட தட்டை சேர விடக் கூடாது. உடனுக்குடன் கழுவி வைக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் செல்வம் சேரும்.