செல்வ செழிப்பை தரும் அன்னபூரணி வழிபாடு!

81

செல்வ செழிப்பை தரும் அன்னபூரணி வழிபாடு!

அன்னபூரனியை பச்சரிசி கொண்டு வழிபாடு செய்து வந்தால் செல்வ செழிப்போடு வாழலாம் என்பது ஐதீகம்.

அனைவரது வீடுகளிலும் பூஜையறையில் இருக்க வேண்டிய ஒரு தெய்வம், அன்னபூரணி. இந்த சிலை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக அதற்கு அரிசி போட்டு வழிபாடு செய்து கொண்டே இருப்பார்கள். அப்படி போடும் அரிசி எந்த அரிசிரியாக இருக்க வேண்டும்? அதனால், என்ன பலன் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஒருவரின் அடிப்படைத் தேவை உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை. இந்த மூன்றும் தான் ஒருவரது அடிப்படைத் தேவை. எது இல்லாமல் கூட இருந்துவிடலாம், ஆனால், பசி இல்லாமல் ஒருவரால் கூட இருக்க முடியாது. வறுமையை நீகக்க கூடிய ஆற்றல் எப்போதும் அன்னபூரணிக்கு உண்டு. ஆதலால், வீடுகளில் எப்போதும் அன்னபூரணி படம் வைத்திருப்பதை விட அன்னபூரணி சிலை வைத்திருப்பது மிகவும் விசேஷமானது.

கல் உப்பு வைத்திருக்கும் ஜாடி அல்லது பாத்திரத்திற்கு அருகில் அன்னப்பூரணியின் சிலையை வைத்திருப்பது சிறப்பு. மகாலட்சுமி மற்றும் அன்னபூரணி இணையும் பொழுது வறுமை இல்லாமல் செல்வ செழிப்போடு வாழலாம்.

இரவு நேரங்களில் அன்னபூரணி மற்றும் மகாலட்சுமி ஆகியோர் நமது வீடுகளுக்கு பசியோடு வருவார்களாம். அப்படி வரும் பொழுது சமையலறையில் ஏதும் இல்லையென்றால் அவர்கள் பசியோடு ரொம்பவே வாடிப் போய் விடுவார்களாம். இதனால், சமையலறையில் அடுப்பறையில் ஏதாவது ஒரு பாத்திரத்தை வைத்துவிட்டு தூங்க வேண்டும். அப்படியில்லையென்றால் இரவில் சாப்பாடு இருந்தால் அதில் தண்ணீரை ஊற்றி அடுப்பின் மீது வைத்து விடலாம்.

எதுவும் இல்லையென்றாலும் சிறிய பாத்திரம் அல்லது கிண்ணத்தில் சிறிதளவு சோற்று பருக்கைகள் எடுத்து போட்டு அதில் தண்ணீர் ஊற்றி அதனை வீட்டு பூஜையறையில் வைத்துவிட வேண்டும். அப்படி செய்தால், பசியோடு வரும் மகாலட்சுமி மற்றும் அன்னபூரணி ஆகியோர் அதனை மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஐதீகம்.

அன்னபூரணி கரண்டி வைத்திருக்கும் சிலை ஒன்றை வாங்கி அதனை பித்தளை அல்லது செம்பு தட்டு மீது அரிசி பரப்பி அதன் மீது அன்னபூரணி சிலையை வைக்க வேண்டும். அவர் கையில் இருக்கும் கரண்டியிலும் அரிசி போட்டு வைக்க வேண்டும். அப்படி போடும் அரிசியானது பச்சரிசியாக இருக்க வேண்டும். எப்பொழுதும், பூஜைக்கு பச்சரிசி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சர்க்கரை பொங்கலுக்கு கூட பச்சரிசி தான் படைப்பார்கள். புழுங்கல் அரிசி பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு அன்னபூரணிக்கு பச்சரிசி வைத்து வழிபட்டு வர அவளது பரிபூரண அருள் கிடைக்கும். வாரத்திற்கு ஒரு முறை அந்த பச்சரிசியை காக்கை அல்லது குருவிக்கு உணவாக கொடுத்துவிடலாம். அப்படியில்லை என்றால், அந்த பச்சரிசியை மாவாக்கி அதை வைத்து கோலமிட்டு வர இன்னும் சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.