செல்வ செழிப்பை தரும் பச்சை கற்பூரம்!

135

செல்வ செழிப்பை தரும் பச்சை கற்பூரம்!

செல்வத்தை ஈர்க்கும் சக்தி பச்சைக் கற்பூரத்திற்கு அதிகளவில் உண்டு.

இயல்பாகவே பச்சைக் கற்பூரத்திற்கு அதிக வாசனை தன்மை உண்டு. தினந்தோறும் பச்சைக் கற்பூரத்தை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். பச்சை கற்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தீபம் காண்பித்து வழிபட்டு வந்தால் பணம் எப்பொழுதும் வந்து கொண்டே இருக்கும்.

பச்சைக் கற்பூரத்திற்கு இருக்கும் வாசனை காரணமாக வீட்டில் ஏதேனும் துர்சக்திகள் இருந்தால் வெளியே போய்விடும். துர்சக்திகள் வெளியே போய்விட்டால் வீட்டில் நிம்மதி வந்து விடும். மேலும், பண வரவும் இருந்து கொண்டே இருக்கும். அந்த இடத்தில் பச்சை கற்பூரம் வைத்தால் எதிர்மறையான சக்திகள வருவதை தடுத்து நிறுத்தம்

இவ்வளவு ஏன், நீங்கள் வேலைக்கு சென்றாலும், 2 அல்லது 3 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் மடித்து வைத்து உங்களது பர்ஸில் எடுத்து வைத்துக் கொண்டால், பணம் குறையவும் குறையாது. எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அதோடு, பண வரவும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

வியாபாரம், தொழில் விருத்தியடை பணப்பெட்டி இருக்கும் இட த்தில் பச்சை கற்பூரத்தை போட்டு வைத்தால் பணம் கூடிக் கொண்டே இருக்கும். அதோடு வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களுக்கும் பச்சைக் கற்பூரத்தை பயன்படுத்தினால், இன்னும் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் இட த்தில் பச்சைக் கற்பூரம் இருந்தால் செழிப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.