சொத்து பிரச்சனை தீர வழிபட வேண்டிய கோயில்!

44

சொத்து பிரச்சனை தீர வழிபட வேண்டிய கோயில்!

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ளது கடில் துர்கா பரமேஸ்வரி கோயில். இந்தக் கோயிலில் துர்கா பரமேஸ்வரி மூலவராக காட்சி தருகிறாள். ஒவ்வொரு ஆண்டும் நாக பஞ்சமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் பிரம்மோற்ஸவம் ஆகிய நாட்களில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

நேத்ராவதி நதியின் நடுவில் அம்மன் கொலு வீற்றிருப்பதால், கர்ப்பகிரகம் ஈரமாக இருப்பதோடு கோயில் பிரசாதமான குங்குமமும் ஈரமாக இருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம், வளையல், உடுப்பி செண்டு மல்லிகை, மைசூரு மல்லிகை, பாக்குப்பூ, சந்தனம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

வெப்ப நோய் தீர, குடும்ப தகராறு, சொத்து பிரச்சனை தீர, திருமண வரன் அமைய, குழந்தை பாக்கியம் கிடைக்க, இழந்த பொருள் திரும்ப கிடைக்க இங்கு வழிபாடு செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு வஸ்திரம் சாற்றி இளநீர் அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

கோயிலுக்கு பின்பகுதியில், நந்தினி ஆறு இரண்டாக பிரிந்து மாலை அணிவித்தது போன்று சுற்றி ஓடுகிறது. கோயிலுக்குள் நுழையும் முன்பாக நதிகளின் சலசலப்பு காதுகளுக்கு இன்ப தேனாக உள்ளது. நதியின் நடுவில் அம்மன் கொலு வீற்றிருப்பதால், கர்ப்பகிரகம் ஈரமாக இருப்பதோடு, கோயிலில் கொடுக்கப்படும் குங்கும பிரசாதமும் ஈரமாக இருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம், வளையல், உடுப்பி செண்டு மல்லிகை, மைசூரு மல்லிகை, பாக்குப்பூ, சந்தனம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அம்மனுக்கு இளநீர் அபிஷேகம்:

உக்கிரமாக இருந்த அம்மனை முனிவர்களும், தேவர்களும் குளிரச் செய்தனர். இதன் அடிப்படையில் தான் அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. வெப்ப நோய் தீர, குடும்ப தகராறு, சொத்து பிரச்சனை தீர இளநீர் காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த இளநீர் கொண்டு தான் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. வாரத்திற்கு கிட்டத்தட்ட 3 ஆயிரம் வரையிலான இளநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.

உடுப்பி சங்கரபுரம் மல்லிகை:

தமிழகத்தில் மல்லிக்கு பெயர் போன ஊர் எது என்றால் அது மதுரை தான். தமிழகத்திற்கு மதுரை என்றால் கர்நாடகாவுக்கு உடுப்பி சங்கரபுரம் மல்லி புகழ்பெற்றதாக உள்ளது. அம்பாளுக்கு அணிவிக்கப்படும் மாலையில் இந்த உடுப்பி சங்கரபுரம் மல்லி மாலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமண வரன் அமையவும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும், இழந்த பொருள் திரும்ப கிடைக்கவும் இந்த மலரை வாழை நாரில் தொடுத்து அணிவிக்கின்றனர். கர்நாடகா மக்கள் அம்பாளை துர்க்காம்மா என்று அழைக்கின்றனர்.

கோலா ஆட்டம்:

கோயிலில் யட்சகானம் என்ற கோலா ஆட்ட வழிபாட்டுக்கு வரும் 25 ஆண்டுகளுக்கும், சண்டி ஹோமத்திற்கு ஒரு ஆண்டுக்கும் முன்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் தெய்வ வேடமிட்டு வந்து வேடமிட்டு வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது போன்று இங்கும் 16 கைகளுடன் கூடிய அம்மன் வேடமிட்டு வந்து பிரார்த்தனை நிறைவேற்றுவதே கோலா ஆட்டம். பக்தர்கள் வேடமிட்டு இந்த பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

தல வரலாறு:

ஒரு காலத்தில் உலகத்தில் பஞ்சம் தாண்டவமாடியது. அப்போது, ஜாபாலி முனிவர் வறுமை நீங்க இறைவனை நினைத்து தவம் புரிந்தார். இதனால், காமதேனு பசுவின் மகளான நந்தினி பசுவை பூலோகத்திற்கு சென்று வறுமை நீங்கி வளம் சேர்க்கும்படி இந்திரன் கட்டளையிட்டான். ஆனால், பூலோகத்தில் அதிகளவில் பாவிகள் இருப்பதால் அங்கு செல்வதற்கு நந்தினி மறுப்பு தெரிவித்தது. மேலும், தன்னை பூலோகத்திற்கு அனுப்பக் கூடாது என்று அன்னை உமையவளை நந்தினி வேண்டினாள்.

இதற்கு அன்னை, நீ பசுவாக செல்ல வேண்டாம். மாறாக, புண்ணியம் சேர்க்கும் நதியாக சென்று மக்களுக்கு பணியாற்று என்றாள். இதைக்கேட்டு ஆனந்தமடைந்த நந்தினி, நேத்திரவதி என்ற பெயரில் பூலோகத்தில் ஓட ஆரம்பித்தாள். அந்த சமயத்தில் அருணாசுரன் என்ற என்பவன் பூவுலகில் பல கொடுமைகளை செய்து வந்தான். அவனிடமிருந்து உயிர்களை காப்பாற்ற முனிவர்கள் அனைவரும் அன்னை தேவியை வேண்டினர்.

இதையடுத்து, அருணாசுரனை சம்ஹாரம் செய்ய, அம்பிகை, மோகினியாக தோன்றினாள். அவளது அழகில் மயங்கிய அசுரன் அவளை பின் தொடர்ந்தான். அப்போது அம்பிகை நேத்திரவதி என்ற நதியின் நடுவில் இருந்த பாறையின் பின் ஒளிந்து கொள்வது போன்று பாவனை செய்தாள்.

இதைக் கண்ட அருணாசுரன் அம்பிகையை பிடிக்க முற்பட்டான். அவள் வண்டு வடிவம் எடுத்து அசுரனை சம்ஹாரம் செய்தாள். இதையடுத்து, உக்கிரமான அம்மனை சாந்தப்படுத்த முனிவர்களும், தேவர்களும் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அம்பிகையின் உக்கிரம் தணிந்த பின்பு நேத்திரவதி நதியின் நடுவில் துர்கா பரமேஸ்வரி என்ற பெயரில் கோயில் கொண்டாள். இவள், லிங்க வடிவில் இருப்பதாகவும், அம்பாளாக அலங்காரம் செய்துள்ளதாகவும் சொல்கின்றனர்.

நதியின் மடியில் (நடுவில்) அம்பிகை தோன்றியதால், அவள் தோன்றிய இடம் கடில் எனப்பட்டது. கடில் என்பதற்கு மடில் என்று பொருள். கடில் என்பது மருவி தற்போது கட்டீல் என்று ஆனது.