சொந்த வீடு வேண்டுபவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய தலம் – சிறுவாபுரி முருகன் திருக்கோவில்

48

காண கண் கோடி வேண்டும் அழகு சிறுவாபுரி முருகனை காண – சொந்த வீடு வேண்டுபவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய தலம்

பல லட்சங்கள் சம்பளம் வாங்கும் நபர் , ஒரு லட்சம் வாடகை கொடுப்பவராக இருப்பார் . சில ஆயிரங்கள் சம்பளம் வாங்கும் நபரோ , சொந்த வீட்டில் நிம்மதி ஆக இருப்பதையும் பாத்து இருப்போம் . வீட்டை கட்டி பார் – கல்யாணம் செய்து பார் என்று பெரியவர்கள் கூறுவது உண்டு . சொந்த வீடு கிடைக்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பது இல்லை , சொந்த ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் 4 ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி வலுவாக இல்லாமல் இருந்தால் – சொந்த வீடு கிடைப்பது சிக்கல் ஆகி விடும் . இவ்வாறு சொந்த வீடுகள் அமைப்பு இல்லாதவர்கள் , செவ்வாயின் பரிகார தலங்களுக்கு செல்வது மூலம் சொந்த வீடு அமைப்பை உருவாக்கி கொள்ள இயலும் . சென்னையில் சொந்த வீடு வேண்டும் என்று தவிப்பவர்களுக்கு அருள்பலிக்க சிறுவாபுரி முருகன் உள்ளார் . தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும். சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது.

சிறுவாபுரி முருகன் அபிஷேகத்தின் போது பார்க்க, அவர் மாமன் பெருமாளைப் போல இருக்கிறார். ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி எதிரே சிறுவாபுரி முருகனை காண்பித்தால் ஏதோ பெருமாள் கோவிலின் கருவறைக்கு முன்னே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றே தோன்றும். திருமலையில் ஸ்ரீனிவாசன் எப்படி நிற்கிறாரோ அதே போல இவரும் நிற்கிறார். முருகப் பெருமான் வள்ளியைத் திருமணம் செய்யச் செல்லும் வழியில் சிறுவாபுரியில் இளைப்பாறிவிட்டுச் சென்றார் என்றும் இந்த ஆலயத்தில் தங்கி அமுது உண்ட இந்திரன் மற்ற தேவர்களுக்கு வீடுபேறு கிடைக்க வேலவன் அருள் புரிந்தார் என்றும் தல வரலாறு கூறுகிறது. திரேதா யுகத்தில் இராமர் அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்டார். அப்போது யாகப் பசுவாக அனுப்ப வேண்டிய குதி ரையை ஏவிவிட்டார். அந்தக் குதிரை வால்மீகி முனிவர் ஆசிர மத்திற்கு வர, அங்கு வளர்ந்த இராமரின் பிள்ளைகள் லவனும் குசனும் அந்தக் குதிரையைக் கட்டிப் போட்டனர். இதனை அறிந்த இராமர் உடனே லட்சு மணனை அழைத்து குதிரையை மீட்டு வரச் சொன்னார். அது முடியாமல் போகவே, இராமரே நேரில் சென்று சிறுவர்களிடம் போரிட்டு அவர்களை வென்று குதிரையை மீட்டுச் சென்றார். இராமரிடம் லவனும் குசனும் போர் செய்த இடமே சிறுவாபுரி. இது இராமாயணச் செய்தியாகும்.

அருணகிரி நாதர் நான்கு திருப்புகழ்ப் பாடல்களால் இந்த அழகு முருகனைப்பற்றிப் பாடியுள்ளார் என்றால் இந்த ஆலயம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே இருந்தி ருக்கிறது என் பதை அறியலாம். முருகம்மையார் என்ற முருக பக்தர் சிறுவா புரியில் வாழ்ந்து வந்தார். இந்த அம்மையார் எப்போதும் முருகன் நாமத்தையே உச்சரித்து வந்தார். இதனைப் பொறுக்காத இவரின் கணவர் தன் மனைவி முருகம்மையாரின் கரங்களை வெட்டினார். உடனே முருகா என்று அம்மையார் முருகனை நினைத்து அழுதார். விரைவில் முருகன் அம்மையாருக்கு தரி சனம் தந்து வெட்டிய கரத்தை மீண்டும் பழையபடியே சேர்த்து வைத்தார். இந்த அற்புதம் இந்தத் தலத்தில்தான் நடந்தது. இதனை தவத்திரு முருகதாச சுவாமிகள் பாடல் மூலமாக எழுதியுள்ளார். இந்த ஆலய இராஜ கோபுரம் ஐந்து நிலை களுடன் கம்பீரமாக வருக வருக என்று கூறி பக்தர்களை அழைக்கிறது. உயரமான கொடி மரத்திற்கு முன்னால் மரகதப் பச்சை மயில் வீற்றிருக்கிறது. இதைப் போன்ற பச்சைமயில் அமைப்பு வேறெங்கும் காண முடியாது. இந்த ஆலயத்திலிருந்து வெளியில் வரும் வழியிலிருந்து மரத்தால் படிக்கட்டுகள் அமைந் துள்ளன. அந்தப் படிக்கட்டுகள் வழியாக ஏறித்தான் மூலவரை தரிசிக்க முடியும். தரிசிக்கும் வழியில் தெற்கு மூலையில் மரகதக் கல்லில் சூரியன் சந்நிதியும் கிழக்கே இராஜகணபதி மரகதக் கல்லில் காட்சி அளிக்கும் சந்நிதியும் உள்ளன. அடுத்து அண்ணாமலையார். மரகதப் பச்சையில் சந்நிதி கொண்டுள் ளார்.

அடுத்து முருகன் வள்ளியுடன் திருமணக் கோலத்துடன் காட்சி தருகிறார். நீண்ட காலம்திருமணம் நடக்காதவர்கள் இந்தச் சந் நிதியில் வந்து பூஜை களும் வழிபாடுகளும் பரிகாரங் களும் செய்தால் விரைவில் திருமணம் கைகூடி வரும். அடுத்து உண்ணாமுலை அம்மன் சந்நிதியில் அனைவரும் பிரார் த்தனை செய்யலாம். அடுத்து ஆலயத்தைச் சுற்றி வரும் வழியில் ஸ்ரீ மரகத விநாயகர் சந்நிதியும், அருகில் மகிழம்பூ மரமும் உள்ளன. ஆதிமூலவர் பாலசுப்பிரமணியர் சந்நிதியில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த முருகர் மிக மிக எளிமை யானவர். எதிர்பார்ப்பு அற்றவர். இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை. திருவண்ணாமலையை நினைத் தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.அனைவருக்கும் இறைவன் அருள் கிடைக்கட்டும் .