ஞாயிறு பௌர்ணமி: தீராத நோய்கள் தீர துர்க்கை அம்மன் வழிபாடு!

126

ஞாயிறு பௌர்ணமி: தீராத நோய்கள் தீர துர்க்கை அம்மன் வழிபாடு!

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி நாளில் இந்த மந்திரத்தை சொல்லி வந்தாலும் எதிரிகள் தொல்லை மறையும், நீண்ட ஆயுள் கிடைக்கும், மரண பயம் நீங்கும், செல்வம் பெருகும், தெய்வங்களின் அருள் கிடைக்கும் ஆகிய நன்மைகள் பெற்று இறுதியில் மோட்ச நிலையை அடையலாம்.

பௌர்ணமி மந்திரம்:

ஓம் கமலவர்ணனே போற்றி

ஓம் சித்திரை உருவே போற்றி

ஓம் பயம் போக்குபவனே போற்றி

ஓம் கால உருவே போற்றி

ஓம் அந்தக நண்பனே போற்றி

ஓம் ஞான உருவே போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கணக்கனே போற்றி

ஓம் தர்மராஜனே போற்றி

ஓம் தேவலோக வாசனே போற்றி

ஓம் ஆயுள் காரணனே போற்றி

ஓம் மேன்மை தருபவனே போற்றி

ஓம் குழந்தை வடிவினனே போற்றி

ஓம் குளிகன் உருவினனே போற்றி

ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி

ஓம் சித்திரகுப்தனே போற்றி

பௌர்ணமி நாளில் விரதம் இருந்து இஷ்ட தெய்வங்களை வழிபட்டு வந்தாலும் நினைத்த காரியங்கள் இனிதே நடந்து முடியும். அதோடு, இந்த பொர்ணமி நாளில் உங்களால் முடிந்த தான தர்மங்களை செய்ய வேண்டும்.

ஞாயிறு பௌர்ணமி:

ஞாயிற்றுக்கிழமையில் பௌர்ணமி வந்தால் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமையில் பௌர்ணமி வந்தால் அது சூரியனுக்கு உகந்ததாகும். சூரிய தோஷம் உள்ளவர்களும், சூரியனால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

மேலும், உத்திராடம், உத்திரம், கிருத்திகை நட்சத்திரக்காரர்கள், சிம்ம ராசிக்காரர்கள் ஆகியோரும் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம். அது என்னவென்றால், துர்க்கை அம்மனுக்கு சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலம் தீராத நோய்கள் தீரும், வாழ்வில் யோகம் உண்டாகும். அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம். ஒருவேளை ராசி, நட்சத்திரம் தெரியாவர்களும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் கூட இந்த பரிகாரத்தை செய்து வர பலன்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.