தங்கம் வேணுமா, அம்மன் வாழிபாடு செய்யுங்கள்!

195

தங்கம் வேணுமா, அம்மன் வாழிபாடு செய்யுங்கள்!

நவக்கிரகங்களில் ஒன்றான சுக்கிரனை வழிபட ஏற்ற நாள் வெள்ளிக்கிழமை. அம்மனுக்கும் ஏற்ற நாளும் இந்த நாளே. செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களுமே மங்களகரமான நாட்கள். அதிலேயும்,  ஆடி மாதம் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களுமே இன்னும் சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படுகிறது. பொதுவாக ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்த்தல், பால்குடம் எடுத்தல், தீமிதித்தல் என்று அனைத்தும் அம்மன் கோயில்களில் திருவிழாவாக இருக்கும்.

பார்வதி தேவியின் தவத்தைக் கண்டு மெய்சிலிர்த்த சிவபெருமான், ஆடி மாதத்தை அம்மன் மாதமாக இருக்க வரம் கொடுத்தார் என்பது ஐதீகம். மேலும், இந்த ஆடி மாதத்தில் சிவனுக்கும் இருக்கும் சக்தியை விட அம்மனுக்கு அதிக சக்தி இருக்குமாம். பூமாதேவி அவதரித்தது கூட இந்த ஆடி மாதத்தில் தானாம்.

பொதுவாக ஒரு மாசத்த்தில் 4 வெள்ளிக்கிழமைகள் வரும். சில மாதங்களில் 5 வெள்ளி கூட வரும். இந்த மாதத்தில் 4 வெள்ளி மட்டுமே. ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விஷேசமானது. ஆடி முதல் வெள்ளி சொர்ணாம்பிகைக்கும், 2ஆவது வெள்ளி அங்காள பரமேஸ்வரிக்கும், 3ஆவது வெள்ளி அன்னை காளிகாம்பாளுக்கும், 4ஆவது வெள்ளி காமாட்சி அம்மனுக்கும் உகந்த நாள். இதுவே 5ஆவது வெள்ளியாக இருந்தால், அது வரலட்சுமிக்கு உகந்த நாள்.

காகபுஜண்டவர் என்பவர் சிவனை தரிசிப்பதற்காக கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கடும் தவம் புரிந்துள்ளார். இதையறிந்த சிவபெருமான், 16 முகங்களோடு அவதரித்து, என்ன வரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு காகபுஜண்டவர், தாங்கள் இந்த தலத்திலேயே எழுந்தருளி மக்களுக்கு பொன், பொருள் என்று அனைத்து செல்வங்களையும் அள்ளித் தர வேண்டும் என்று வரம் கேட்டுள்ளார்.

காகபுஜண்டவர் கேட்டவாறு, வரமளித்த சிவபெருமான், அங்கேயே எழுந்தருளினார். இதன் விளைவாக, சிவபெருமான், சுவர்ணபுரீஸ்வரர் என்றும், அம்மனுக்கு சொர்ணாம்பிகை என்றும், சிவபெருமானின் காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவருக்கு சுவர்ண பைரவர் என்றும் பெயர் வந்தது. இந்த கோயில், பொன்பரப்பின்ற ஊரில் இருக்கிறது.

ஆடி முதல் வெள்ளியான இன்று சொர்ணாம்பிகை அம்மனை வழிபாடு செய்தால், வீட்டில் தங்க மழை பொழிவதோடு அனைத்து செல்வங்களும் கிட்டும். இன்றைய நாளில் வீட்டை சுத்தம் செய்து, வாசலில் கோலமிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி அம்மனை நினைத்து வணங்கி வர வேண்டும். அதோடு சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும், உங்களால் முடிந்தால் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், ஜாக்கெட் துணி, தாலிச்சரடு, கண்ணாடி என்று ஏதாவதை தானமாக தரலாம்.

வீட்டு பூஜையறையில் விளக்கேற்றி சாமி கும்பிடும் போது சொல்ல வேண்டிய சொர்ணாம்பிகையின் மூல மந்திரம்…..

வேதாந்த வேத்யை விதுசேகராயை

வித்யுத் ஸஹஸ்ர கோடி ரவி ப்ரகாஸிகாயை

ஸுகவன ஷேத்ர நிவாஸிகாயை

ஜெய ஜெய ஸ்ரீ மாதா சொர்ணாம்பிகாயை!

இன்று சொர்ணாம்பிகையை வழிபட்டு அனைத்து நலன்களையும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வோம்….