தலையில் வைக்கும் பூ காய்வதற்குள் தூக்கி எறிந்தால் என்னாகும்?

37

தலையில் வைக்கும் பூ காய்வதற்குள் தூக்கி எறிந்தால் என்னாகும்?

பெண்களுடைய கூந்தலுக்கு அழகு சேர்க்கும் ஒன்றாக பூ உள்ளது. அப்படிப்பட்ட இந்த பூவை பலரும் விரும்பி வைக்கின்றனர். சிலருடைய வீட்டில் வாங்கி கொடுப்பதே இல்லை. சிலர் தினமும் வைக்க முடியாவிட்டாலும் நல்ல நாள், விசேஷ நாள்கள் போன்ற தினங்களில் தலையில் பூச்சூடி கொள்கின்றனர். அப்படிப்பட்ட இந்த பூவை சிலர் வாடுவதற்கு முன்னரே தலையிலிருந்து தூக்கி வீசி விடுகின்றனர். இப்படி செய்வது சரியானதா என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிலர் தலையில் இருக்கும் பூவை வாடுவதற்கு முன்னரே தூக்கி எறிந்து விடுகின்றனர். இப்படி செய்வது சரியானது அல்ல. தலையில் சூடிய பூ முழுமையாக காய்ந்த பிறகு தான் அதை தூக்கி எறிய வேண்டும். ஏனென்றால் பெண்கள் எந்த அளவிற்கு பூ வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அந்தப் பெண்களிடம் எப்போதுமே பணம் புரளும் என்பது நம்பிக்கை. அதாவது பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளும் பூக்களுக்கு பின்னால் பண சேர்க்கைக்கு உரிய தாந்திரீகம் உண்டு.

ஆகவே ஒருவர் கொடுக்கும் பூவை இன்னொருவர் எந்த காரணத்திற் – காகவும் வேண்டாம் என்று சொல்ல கூடாது என்கிறது சாஸ்திரம். அது போல் பெண்களுடைய தலையில் இருக்கும் பூக்கள் வாடுவதற்கு முன்னரே எடுத்து விட்டால் நிச்சயம் கையில் பணம் தங்காது. ஆகவே பூ காய்ந்த பின்னர் தலையில் இருந்து எடுத்து தூக்கி குப்பையில் வீசி எறிந்து விடுங்கள். மேலும் தலையில் இருக்கும் பூவை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் வைக்க கூடாது. ஒரு முறை தலையில் வைத்த பூவை எந்த காரணத்தைக் கொண்டும் காய்வதற்கு முன்னர் மீண்டும் எடுத்து விடக்கூடாது என்பது தான் ஐதீகம்.

அப்படி நீங்கள் எடுத்தால் நிச்சயம் உங்கள் கைகளில் பணம் சேர்வது தடைபடும். பூக்களுக்காக செலவு செய்வதற்கு தயங்கினால் ஒரு முழம் பூ கூட வாங்க முடியாத வறுமையான நிலை ஏற்படலாம். அதற்காக தினமும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டாம். நல்ல நாள், விசேஷங்கள் வரும் பொழுது தலை நிறைய பூச்சூடி சோதனை செய்து பாருங்கள். உங்களிடம் பணவரவு தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும். அதிலும் குறிப்பாக திருமணமான புது மணப்பெண்கள் தலை நிறைய பூ இல்லாமல் வெளியில் எங்கும் செல்லாதீர்கள்.