தவறான இடத்தில் பூஜையறை அமைந்தால் ஏற்படும் விளைவுகள்!

34

தவறான இடத்தில் பூஜையறை அமைந்தால் ஏற்படும் விளைவுகள்!

ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு பூஜை அறை என்பது சரியான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். தென் கிழக்கு, வட மேற்கு, தெற்கு நடுப்பகுதி, மேற்கு நடுப்பகுதி ஆகிய பகுதிகளில் மட்டுமே பூஜையறை அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்கப்படவில்லை என்றால், தீமைகள் உண்டாகும். இது குறித்து தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

  1. நல்ல வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். சில நேரங்களில் வேலையே இல்லாமல் போகும்.
  2. குடும்ப உறவுகளில் பிரிவினை ஏற்படும். அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில் பிரச்சனை வரும். கணவன் – மனைவி உறவில் விரிசல் ஏற்படும்.
  3. குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். ஒரு சில நேரங்களில் அது இல்லாமல் கூட போகும். குழந்தையை தத்தெடுக்கும் சூழ்நிலை ஏற்படும்.
  4. வியாபாரம் நொடிந்து போகும். அப்படியில்லை என்றால், வியாபாரம் செய்ய முடியாமல் போகும்.
  5. உடல்நிலை பாதிப்பு வரும். விபத்து கூட ஏற்பட வாய்ப்புண்டு.
  6. கடன் சுமை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் சிக்கல் ஏற்படும்.
  7. வெளியூர் அல்லது வெளிநாட்டிலேயே கணவன் அல்லது மனைவி யாரேனும் ஒருவர் தங்கி இருவரும் பிரியும் சூழல் வரும்.
  8. வீட்டிலுள்ள பெண்கள் எப்பொழுதும் கோயில் கோயிலாக சுற்றக்கூடிய நிலை வரும்.
  9. பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் மீது நம்பிக்கை வைப்பது.
  10. சொத்துக்களை அல்லது வருமானங்களை கோயிலுக்கோ அல்லது மடத்திற்கோ எழுதி வைக்கும் நிலை உருவாகும்.

இப்படியெல்லாம் பிரச்சனை வருகிறது என்றால், உடனடியாக சிவனடியார்களை சந்தித்து வீட்டு பூஜையறை எந்தப் பக்கம் அமைக்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொண்டு அதற்கேற்ப வீட்டு பூஜையறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.