திருமணத் தடை நீக்கும் சுயம்வர கலா பார்வதி ஹோமம்!

81

திருமணத் தடை நீக்கும் சுயம்வர கலா பார்வதி ஹோமம்!

கிரக நிலைகளின் பெயர்ச்சி, முன்னோர்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப ஜாதகர் ஒருவருக்கு பலன்கள் அமைகிறது. கிரக நிலைகள் சாதகமாக இருந்தால் அந்த ஜாதகருக்கு எல்லாம் நன்மையாக நடக்கும். அப்படியில்லையென்றால், திருமணத் தடை முதல், வேலை வாய்ப்பு சிக்கல், பொருளாதார பிரச்சனை என்று பல பிரச்சனைகள் ஏற்படும்.

திருமணத் தடை காரணமாக, ஆண்களும் பெண்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றனர். இவ்வளவு ஏன், பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களும் வரன் தேடி அலைந்து திரிந்து சோர்ந்து போய்விடுகிறார்கள். ஒன்று இருந்தால் மற்றொன்று இருப்பதில்லை. இப்படி தொடர்ந்து திருமணத் தடை இருந்து கொண்டே இருக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், கால சர்ப்ப தோஷம் குரு பலம் இல்லாமல் இருப்பது என்று பல காரணங்களால் திருமணத் தடை ஏற்படுகிறது.

ருது தோஷம் என்பது ஒரு பெண் வயதுக்கு வந்த நேரத்தை வைத்து ஜாதகத்தில் ஏதேனும் தோஷமிருந்தால் திருமணம் செய்ய தாமதமாகும். திருமண வயதை அடைந்த போது தசா புத்தி பாதகமான நிலையில் இருந்தால் கூட திருமணத் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு.

இந்த திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம் (பெண்களுக்க்கு திருமணம் நடக்க), ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் (ஆண்களுக்கு திருமணம் நடக்க) நடத்தியுள்ளார் வாசியோகி ஓம் பரமானந்த பாபா. இந்த ஹோமத்தை கோயம்புத்தூர் மாவட்டம் உப்பிலிபாளையத்தில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்தில் நடத்தியுள்ளார்.

திருமணத் தடை மட்டுமின்றி வேலை வாய்ப்பு தடை, தொழில் முன்னேற்ற தடை, பொருளாதார முன்னேற்ற தடை, குழந்தையின்மை, குடும்பத்திலுள்ள அனைத்து பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சித்தர்களின் அருளாசியுடன் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.