திருமணத் தடை நீக்கும் விநாயகர் வழிபாடு!

43

திருமணத் தடை நீக்கும் விநாயகர் வழிபாடு!

திருவண்ணாமலை மாவட்டம் கூழமந்தல் ஏரிக்கரை என்ற ஊரில் உள்ள கோயில் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில். இந்தக் கோயிலில் நட்சத்திர விருட்ச விநாயகர் மூலவராக காட்சி தருகிறார். உற்சவராகவும் விநாயகர் காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, கஜமுகா சதுர்த்தி, காணும் பொங்கல், 108 கோ பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சித்திரை பௌர்ணமி சூரன் வதம், சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷ வழிபாடு மற்றும் செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

ஸ்ரீ காஞ்சி மகா பெரியவாள் வழிகாட்டுதலின்படி முக்தியடைந்த தவத்திரு சிவானந்த சரஸ்வதி சதாசிவ சித்தர் சுவாமிகளினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நட்சத்திர அதிதேவதைகள் மற்றும் 27 விருட்சங்கள்  ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ சங்கர விஜேந்திர சரஸ்வதி சுவாமிகளால் அத்தி ருத்ராட்ச லிங்கேஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறப்புடைய திருக்கோயில் ஆகும்.

உலகில் வேறு எங்கும் தரிசிக்க முடியாத ஜென்ம நட்சத்திரத்திற்கே  உரிய அதிதேவதை திருக்கோயில் ஜென்ம நட்சத்திர வழிபாடு செய்ய தொடங்கினாலே தீமைகள் விலகி நன்மைகள் தொடங்கும். திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், பலவித தோஷங்கள் நீங்கவும், வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் தடைகள், பலவித துன்பங்கள் விலக என்று பல இன்னல்களிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்யலாம்.

அவரவருக்குரிய ஜென்ம நட்சத்திரம் வரும் நாளை அறிந்து அந்த நட்சத்திர நாளில் நட்சத்திர அதிதேவதைகளை வழிபாடு செய்வது சிறந்த பலனைக் கொடுக்கும். பித்ரு தோஷம் நீங்கும். இங்கு அருள்பாலிக்கும் பித்ரு பகவானுக்கு அமாவாசை தினத்தில் அர்ச்சனை செய்து கொள்வது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

ஜென்ம நட்சத்திர தினத்தில் அவர்களுக்கு அதிதேவதைகளுக்கு அபிஷேகம் அல்லது அர்ச்சனை செய்து, விருட்சங்களுக்கு பூஜை செய்து கலச நீர் கொண்டு மூன்று முறை விருட்சத்தினை வலம் வந்து நீர் விருட்சத்தின் வேர் பகுதியில் ஊற்றி வழிபாடு செய்வதும் நிவர்த்திக்கடனாக செய்யப்படுகிறது.

இந்தக் கோயிலில் முழு முதல் கடவுள், மும்மூர்த்திகள், என் திசை பாலகர்கள், நவக்கிரகங்கள், 27 நட்சத்திர அதிதேவதைகள், அத்தி ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், சமேத தேவகுரு என்ற பிரகஸ்பதி, ராகு கேது சனீஸ்வரர் என்று அனைத்து தெய்வங்களும் அருள் பாலிக்கின்றனர். பிரதி தினம் நடைபெறும் நித்ய பூஜை காலத்தில் காகம் பிரசாத உணவு கேட்டு பெற்று உண்ணும் அற்புத நிகழ்வு இன்றும் நடைபெறுகிறது. விநாயகரின் உத்திரவு கிடைத்தால் மட்டுமே இந்தக் கோயிலுக்கு வர முடியும்.