திருமணம் நடக்க பசுபதீஸ்வரர் வழிபாடு!

84

திருமணம் நடக்க பசுபதீஸ்வரர் வழிபாடு!

என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும் அதற்குரிய பலன்கள் கிடைப்பதில்லை என்று ஏங்குவோர் எத்தனையோ பேர். அலுவலகத்தில் புரோமோஷன் (உத்தியோக உயர்வு), சம்பள உயர்வு என்று எதுவும் கிடைப்பதில்லை என்றும் புலம்புபவர்கள் கண்டிப்பாக இந்த கோயிலுக்கு சென்று வந்தால் பலன் உண்டு.

கரூர் மாவட்ட த்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோயில் தான் அது. கொங்கு நாட்டின் 7 சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. அதோடு, காமதேனு வழிபட்ட தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சன்னதிகள்:

பசுபதீஸ்வரர் சுயம்பு லிங்கமாக உள்ளார். ஒவ்வொரு ஆண்டு மாசி மாதத்தின் 5 நாட்கள் மட்டும் பசுபதீஸ்வரர் மீது சூரிய ஒளி படுகிறது. மூலவருக்கு இடது பக்கமாக அலங்காரவல்லி, சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.

தல வரலாறு:

படைக்கும் தொழில் செய்து வந்த பிரம்மாவின் கர்வத்தை அடக்குவதற்காக சிவபெருமான் காமதேனுவைக் கொண்டு ஒரு திருவிளையாடல் நடத்தினார். சிவபெருமான், நடத்திய திருவிளையாட்டால் தான் கல்யாண பசுபதீஸ்வர்ர் கோயில் உருவாயிற்று.

காமதேனு சிவபெருமானை அடைவதற்கு ஆவல் கொண்டிருந்தது. அப்போது நாரதரோ, சிவனை அடைவதற்கான அற்புத வழியைச் சொன்னார். அதாவது, வஞ்சி வனத்தில் தவம் செய்தால் நினைப்பது நடக்கும் என்று கூறுகிறார். அதன்படி கேட்ட காமதேனு, வஞ்சி வனத்திற்கு சென்றுள்ளது. அப்போது ஒரு புற்றுக்குள்ள இருந்த சிவலிங்கத்திற்கு தனது பாலை தானாகவே சுரந்துள்ளது.

இதனால், மனமகிழ்ச்சியடைந்த சிவபெருமானோ, காமதேனுவுக்கு விரும்பிய படைக்கும் ஆற்றலை கொடுக்கிறார். இதையறிந்த பிரம்மாவோ தனது தவறை உணர்ந்து சிவனே கதி என்று தஞ்சம் அடைகிறார். இதையடுத்து, பிரம்மாவை மன்னித்து படைக்கும் தொழிலை அவருக்கே கொடுக்கிறார். காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைக்கிறார்.

காமதேனு வழிபட்டதால், இந்த கோயிலில் சிவன் பசுபதீஸ்வரர் என்றும் ஆனிலையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.

பிரார்த்தனை (பரிகாரம்):

  1. திருமணமாகாத ஆண், பெண் இந்தக் கோயிலுக்கு வந்து பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், ஆனிலையப்பர் ஆகியோரை வழிபட்டு வர விரைவில் திருமண பாக்கியம் கிட்டும்.
  2. குழந்தை வரம் வேண்டும் தம்பதியினர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடலாம்.
  3. தொழில் விருத்தியடையவும், உத்தியோக உயர்வு, சம்பள உயர்வு, புதிய வேலை ஆகியவற்றிற்கும் இங்கு வந்து வழிபாடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.