திருமண தடை நீங்க கல்யாண ஆஞ்சநேயர் வழிபாடு!

32

திருமண தடை நீங்க கல்யாண ஆஞ்சநேயர் வழிபாடு!

விழுப்புரம் மாவட்டம் பெருமாப்பக்கம் என்ற ஊரில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வேங்கட வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இது பல்லவர் காலத்திற்கு உட்பட்ட மிகவும் பழமையான கோயில். திருக்கோவிலூரில் உள்ள தேகளீச பெருமாளுக்கு பிடித்தமான கோயிலாக இந்த வேங்கட வரதராஜ பெருமாள் கோயில் விளங்குகிறது.

இந்தக் கோயிலில் வேங்கட வரதராஜ பெருமாள் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி காட்சி தருகிறார். அதோடு, தன்னை நம்பி வரும் பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து அவர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மூலவரது மார்பில் சிம்ம பதக்கம் காட்சி தருகிறது. இதனால், இந்த கோயில் தென் அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது.

பெருமாளின் வலது கை அபய ஹஸ்தமாகவும், இட து கையானது கடி ஹஸ்தமாகவும் இருக்கிறது. இதனால், இந்த பெருமாளை தரிசித்தால், திருப்பதி, காஞ்சிபுரம், அஹோபிபல் ஆகிய இடங்களில் உள்ள பெருமாளை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த வேங்கட வரதராஜ பெருமாள் கோயிலில் லட்சுமி நரசிம்மருக்கு தனியாக சன்னதியும் உள்ளது. இந்தக் கோயிலில் நரசிம்மர், லட்சுமியை தனது மடியில் தாங்கிக் கொண்டு கிழக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். லட்சுமி நரசிம்மருக்கு பானகம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். சுவாதி நட்சத்திர நாளன்று லட்சுமி நரசிம்மரை வழிபட தோஷங்கள் நீங்கும்.

திருமண தடை நீங்க தனி சன்னதியில் உள்ள கல்யாண ஆஞ்சநேயருக்கு மட்டை தேங்காய் அர்ச்சனை செய்தால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.