திருமண வரம் அருளும் வள்ளியூர் முருகன்!

75

திருமண வரம் அருளும் வள்ளியூர் முருகன்!

வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வள்ளியூர் சுப்பிரமணியரைத் தரிசனம் செய்துவிட்டு வந்தால் விரைவில் திருமண வரன் கை கூடி வரும் என்பது ஐதீகம். திருநெல்வேலியிலிருந்து நாகர்கோயில் செல்லும் வழியில் சுமார் 42 கிமீ தொலைவில் உள்ளது வள்ளியூர். இந்தப் பகுதியில் குன்றின் மேல் கோயில் கொண்டுள்ளார் சுப்பிரமணியர். குன்றிருக்கும் இடங்களில் எல்லாம் குமரன் இருப்பான். குமரன் இருக்கும் இடமெல்லாம் குறைவே இருக்காது என்பது ஐதீகம்.

இந்தக் கோயிலுக்கு சென்ற அகத்திய முனிவர், இடைக்காட்டு சித்தர், இந்திரன், அருணகிரிநாதர் ஆகியோர் சுப்பிரமணியரை வழிபட்டு அவரிடம் வரம் பெற்றுள்ளதாக வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை தெப்போத்ஸ்வம் சிறப்பாக நடைபெறும். அதைத் தொடர்ந்து நடைபெறும் திருக்கல்யாணம் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் சஷ்டி ஆகிய நாட்களில் வள்ளியூர் வந்து ஸ்ரீ சுப்பிரமணியரை வழிபட தடைபட்டு வரும் திருமணம் விரைவில் நடந்து முடியும் என்பது நம்பிக்கை.

அதோடு, தை மாதம் வரும் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, தைப்பூசம், சஷ்டி ஆகிய நாட்களில் வள்ளியூர் முருகனுக்கு விரதம் இருந்து வள்ளி மணவாளனை வழிபட கல்யாண வரம் கை கூடி வரும் என்பது ஐதீகம்.