திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

27

திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

 1. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் நேரில் கண்டால் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
 2. தீபத்திருநாளின் போது திருவண்ணாமலையை பார்த்து நமசிவாய சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி முறை சொன்ன பாக்கியம் கிடைக்கும்.
 3. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால், ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும்.
 4. தீபத் திருநாளில் 5 முறை கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அதிலிருந்து விமோட்சனம் கிடைக்கும்.
 5. மலை மீது தீபம் ஏற்றப்படும் போது, “தீப மங்கள ஜோதி நமோ!! நம” என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.
 6. கார்த்திகை தீபத்துக்கு சர்வாலய தீபம், கார்த்திகை விளக்கீடு, ஞானதீபம், சிவஜோதி, பரஞ்சுடர் என்றும் பெயர்கள் உண்டு.
 7. கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
 8. கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
 9. கார்த்திகை மாத தீபத்திருநாளன்று திருவண்ணாமலையில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 10. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என்று 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும்.
 11. சிவபெருமான் கார்த்திகை தீபத் திருநாளில் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம். இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர்.
 12. கார்த்திகை தீபம் தினத்தன்று ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலையில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை.