திருஷ்டிக்கு பூசணிக்காய் உடைப்பது ஏன்?

54

திருஷ்டிக்கு பூசணிக்காய் உடைப்பது ஏன்?

அரக்கர் குலத்தில் பிறந்த ஒரு தவ புதல்வன் தான் கூச்மாண்டன். அரக்கர்கள் எல்லாம், நமக்கு கீழே தான் மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அப்படி, ஒரு நாள், தேவர்களை எல்லாம் வம்புக்கு இழுத்து, அவர்களை கூச்மாண்டன் கொடுமை செய்து வந்தான். அவனின், கொடுமை தாங்க முடியாத தேவர்கள், நாராயணப் பெருமானை சரணடைய வைகுண்டம் சென்றார்கள். தேவனே, தேவர்கள் இனம் அழியாமலிருக்க, தாங்கள் தான் எங்களை காத்தருள் வேண்டும் என்று வேண்டினர்.

ஒரு கட்ட த்தில் அரக்கனின் அழிவு காலம் வந்துவிட்ட தை உணர்ந்த நாராயணப் பெருமான், அரக்கன் இருக்குமிடம் சென்றார். ஆனால், வந்திருப்பதோ, நாராயணப் பெருமான் என்பதை மறந்து, ஆணவத்தில் ஆடிய கூச்மாண்டன் சண்டைக்கும் தயாரானான். நாராயணப் பெருமானுடன் சண்டையிட்டு, சாய்ந்தான்.

அப்போது, கூச்மாண்டன்…எவ்வளோ நல் வழிகள் இருந்தாலும் நீ அழிவை நோக்கி சென்று, உனது அழிவை நீயே தேடிக்கொண்டாய். இது உன் பாவத்தின் சம்பளம் என்றார் நாராயணப் பெருமான். அதற்கு, பெருமானே, வேண்டுபவர்களுக்கு வேண்டிய வரம் தந்து அருள் தாங்கள், எனது கடைசி ஆசையை வரமாக தர வேண்டும் என்று மண்டியிட்டு வேண்டினான்.

உடனே, பெருமானோ, என்ன வரம் வேண்டும் என்று கேட்க, நான் அழிந்தாலும், எனது புகழ் அழியாத வரம் வேண்டும் என்றான். இதற்கு, இதுவரை உன் வாழ்நாளில் நீ எந்த நன்மையும் செய்யவில்லையே. உனக்கு எப்படி அழியாத புகழ் தருவது? என்று நாராயணப் பெருமான் கேட்டார்.

அதற்கு, நாராயணப் பெருமானே, தாங்கள் கையால் அழிவது நான் செய்த பாக்கியம். இதைவிட வேறெந்த, நன்மையும் செய்யவில்லை. உண்மை தான், அழிந்த பிறகாவது மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும். அதற்கு தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்றான் கூச்மாண்டன்.

சரி….நீ பூசணிக்காயாக பிறவி எடுப்பாய் என்று அருள் புரிந்தார். மேலும், உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷமும் மறையும். கண் திருஷ்டியும் மறையும். பில்லி, சூனியம், ஏவல் என்று எதுவும் பாதிக்காது. நீ யாருக்கேனும் தானமாக சென்றால், அவருக்கு நன்மைகள் கிடைக்கும். உன்னை யாரேனும் திருடிச் சென்றால், அவர்களுக்கு சகல தோஷங்களும் பிடித்துக் கொள்ளும் என்று அருள் புரிந்தார்.

இதனால், தான் திருஷ்டிக்காகவும், தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவ தோஷங்கள் நீங்கவும் பூசணிக்காயை உடைக்கிறார்கள். புதிய வீடு கட்டும் போது கூட கண் திருஷ்டி மறைவதற்கு பூசணிக்காயைத் தான் வைப்பார்கள்.

கிராமங்களில் தோட்டக்காரர் இல்லாமல் பூசணிக்காயை பறித்து சென்றால், அதற்குரிய பணத்தை வைத்துவிட்டு தான் எடுத்துச் செல்வார்கள். அந்த பூசணிக்காயை உடைத்தால் சகல தோஷங்களும் நீங்கி விடும் என்பது ஐதீகம். இதனால், தான் திருஷ்டிக்காக பூசணிக்காயை உடைக்கிறார்கள்.