திருஷ்டி தோஷம் நீங்க வெடி வழிபாடு!

97

திருஷ்டி தோஷம் நீங்க வெடி வழிபாடு!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு என்ற ஊரில் உள்ள கோயில் பகவதி அம்மன். இந்தக் கோயிலில் பகவதி அம்மனே மூலவராக காட்சி தருகிறாள். ஒவ்வொரு ஆண்டும் மாசி பெருந்திருவிழா, ஒவ்வொரு தமிழ் மாத கடைசி செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களிலும், பௌர்ணமி நாட்களிலும் இந்தக் கோயிலில் சிறப்பு திருவிழா நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் சிறப்பு.

மலையாளச் சாயலில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோயிலுக்குள்ளாக மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் சிறப்பு. கல்யாண வரன், குழந்தை பாக்கியம், உடல் உறுப்புகள் குறைபாடு, திருஷ்டி தோஷம், தலைவலி நீங்கவும் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

கல்யாண காரியங்களுக்கு பட்டு, தாலியை காணிக்கையாக செலுத்தலாம். உடல் நலம் குணமாகி வந்தவர்கள் வெள்ளியில் கை, கால்கள் செய்து வைத்து அம்மனை வழிபடலாம். மண் சோறு வழிபாடும் இந்தக் கோயிலில் செய்யப்படுகிறது. திருஷ்டி தோஷம் நீங்கப்பட்டவர்கள், வெடி வழிபாடு செய்கின்றனர்.

இந்த பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. பூஜை முடிந்த பிறகு இந்த மண்டையப்பம் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் எடுத்துக் கொள்வதன் மூலமாக தீராத தலைவலியும் நீங்கும் என்பது ஐதீகம். இருமுடி கட்டிக் கொண்டு பெண்கள் அம்மனை வழிபாடு செய்கின்றனர். காலையில் மட்டுமே அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பிரசாதமாக புட்டமுது கொடுக்கப்படுகிறது.

காஞ்சி சங்கராச்சாரியார் கேரளா சீடர்களுடன் சேர்ந்து ஸ்ரீ சக்கரம் வைத்து பூஜை செய்கிறார். தினந்தோறும் தான் தங்கியிருந்த பகுதியில் இருந்து ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு ஸ்ரீ சக்கரம் திரும்ப வரவே இல்லை. எடுத்து பார்த்தும் வரவில்லை.

அதன் பிறகு தனது சித்து விளையாட்டுக்கள் மூலமாக அங்கேயே சமாதி ஆகிவிட்டார். அந்த ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தின் மீது புற்று வளர்ந்து கொண்டே வருகிறது. அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிந்த போது தடுக்கியதில் புற்று இருந்த பகுதியிலிருந்து ரத்தம் வருகிறது.

இது குறித்து கேரள மன்னன் மார்த்தாண்ட வர்மாவிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் சிறியதாக ஒரு குடில் போன்று அமைத்து வழிபாடு செய்தனர். நாளடைவில் பகவதி அம்மனின் அருளால், அந்த இடத்தில் பெரிய கோயிலாக கட்டப்பட்டது.