துஷ்ட சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் வேல்!

79

துஷ்ட சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் வேல்!

எந்த ஒரு தீய சக்தியும் வீட்டை நெருங்காமல் இருக்க வேல் ஒன்றைப் பூஜை செய்து வீட்டில் நிறுவினாலே போதும். அது நம்மைப் ஏவல், பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற எந்த ஒரு பிரச்னையும் நம்மைத் தாக்காத அளவிற்கு பாதுகாக்கும்.

அந்த வேல் பஞ்சலோகம், தங்கம், வெள்ளி, பித்தளை என எது வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த வேல் மீது சுத்தமான தண்ணீர் விட்டு கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய சொம்பில் விபூதி நிரப்பி அதில் வேலை சொருகி வைக்க வேண்டும். வேலுக்கு சந்தனம், குங்குமம், விபூதி போன்றவற்றை வைத்து பூப்போட்டு அலங்கரிக்க வேண்டும்.

தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு நேரமும் சூடம் ஏற்றி முருகப் பெருமானை நினைத்து வணக்க வேண்டும். அந்த வேல் முன்பாக கந்த சஷ்டி கவசத்தை உரக்க படிக்க வேண்டும்.

தொடர்ந்து 27 நாட்கள் அந்த வேலுக்கு பூஜை செய்ய வேண்டும். 28வது நாள் சொம்பில் உள்ள விபூதியை சிறிதளவு எடுத்து சுத்தமான மஞ்சள் துணியில் கட்டி உயரமான இடத்தில் தொங்க விட வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நம்முடைய வீட்டை உள்ள எதிர்மறை ஆற்றல்களில் மறையும்.

எதிர்மறை ஆற்றல் தோன்றாமல் அந்த வேல் 24 மணி நேரமும் நம்மை பாதுகாக்கும். அந்த வேல் விபூதி நிறைந்த அந்த சொம்பிலேயே இருக்கட்டும். பூஜை அறையில் அதை வைத்து வழிபட்டு வருவது நல்ல பலனைத் தரும்.