தூங்கி எழுந்ததும் ஏன் உள்ளங்கை பார்க்கணும் தெரியுமா?

91

தூங்கி எழுந்ததும் ஏன் உள்ளங்கை பார்க்கணும் தெரியுமா?

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருக்கும் அல்லாம இந்த உலகின் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தூக்கம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், தூங்கும் நேரம் வேண்டுமானால் வேறுபடுமே தவிர தூக்கம் தவிர்க்க முடியாத ஒன்று தான். ஆனால், விஞ்ஞான வளர்ச்சியில், தூக்கத்தின் நேரம் மாறுபட்டு வருகிறது. இதன் விளைவாக புதுப்புது நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.

சரி, காலையில் தூங்கி எழுந்ததும் ஏன் உள்ளங்கையை பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? காலையில் தூங்கி எழுந்தவுடன் இரு கைகளையும் ஒன்றாக தேய்த்து உள்ளங்களைகளைப் பார்த்தால் அன்று முழுவதும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

நம் உடலின் மற்ற பகுதிகளைவிட உள்ளங்கை அதிக சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. நமது உள்ளங்கையில் மகாசக்தி, மகா சரஸ்வதி, மகாலட்சுமி ஆகிய தெய்வங்கள் இருப்பதாக ஆன்மீகம் கூறுகிறது. மேலும், கையின் நுனியில் அலை மகள் இருப்பதாகவும், நடுவில் கலை மகள் இருப்பதாகவும் சாஸ்திரம் கூறுகின்றது.

இதன் காரணமாக, தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் தெய்வங்களின் அருளைப் பெற உள்ளங்கைகளை பார்த்து எழுந்திருக்கும் போது அறிவு, செல்வம், ஆன்மீகம் ஆகிய மூன்றும் பெறலாம்.