தூங்கும் முறை குறித்து சித்தர்கள் கூறிய வழிமுறைகள்!

92

தூங்கும் முறை குறித்து சித்தர்கள் கூறிய வழிமுறைகள்!

பொதுவாக இரவு 8, 9 மணியாகிவிட்டாலே நம் தூங்குவதற்கு சென்றுவிடுவோம். சிலர் சாப்பிட்ட உடனே தூங்கச் செல்வார்கள். சிலர் டிவி, லேப்டாப், மொபைல் போன் பார்த்துக் கொண்டே தூங்க செல்வார்கள். பார்த்துக் கொண்டிருக்கும் போதே தூங்கிவிடுவார்கள்.

எப்படி வேண்டுமானாலும் தூங்கலாம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். தூங்குவதிலும் கூட அறிவியல் உண்மை இருக்கிறது என்று சித்தர்கள் கூறியுள்ளனர். அது என்ன என்பது குறித்து தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்…

இரவு மட்டுமே தூங்குவதற்கு ஏற்ற நேரம் என்பது இயற்கையின் நியதி. குளிர்ச்சியான சூழ்நிலையான இரவு மட்டுமே தூங்குவதற்கு ஏற்ற காலம். விரைவில் தூங்கிச் சென்று அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்பது நமது முன்னோர்கள் வழிவகுத்த முறை. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மொபைல், கம்ப்யூட்டர், டிவி ஆகியவற்றின் காரணமாக இரவு நீண்ட நேரத்திற்குப் பிறகு தான் தூங்கச் செல்கிறோம். ஆனால், இரவில், அதிக நேரம் கண் விழித்திருப்பதால், என்னென்ன தீமைகள் விளையும் என்பது குறித்து சித்தர்கள் ஒரு பாடல் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்

கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை

நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை

நம்பிக் காண்

பாடலின் விளக்கம்:

இரவில் கண் விழிக்க கூடாது. அதையும் மீறி அதிக நேரம் கண் விழித்தால் உடலில் புத்தி மயக்கம், தெளிவின்மை, உடல் சோர்வு, படபடப்பு, பயம், செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற நோய்கள் எளிதில் உண்டாகும் என்பது தான் இதன் விளக்கம்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு

மத்திமம் மேற்கு

மரணம் வடக்கு

ஓங்குயிர் தெற்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுத்தால் நன்மை உண்டாகும்.

மேற்கு திசையில் தலை வைத்து தூங்கினால் கனவு, அதிர்ச்சி சம்பவங்கள் உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கவே கூடாது.

தெற்கு திசையில் தலை வைத்து தூங்கினால் ஆயுள் வளரும். அதாவது ஆயுள் கூடும்.

இதனை அறிவியல் பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளனர். வடக்குப் பகுதியில் காந்த சக்தி அதிகம். மேலும், அந்தப் பகுதியிலிருந்து வரும் காந்த சக்தியானது தலைப்பகுதியில் படும் போது பிராண சக்தியை இழக்கும். இதன் காரணமாக மூளை பாதிக்கப்படுவதுடன் நரம்புத் தளர்ச்சி, இதயக் கோளாறுகள் உண்டாகும்.

குப்புறப் படுத்துக் கொண்டு தூங்கவும் கூடாது. மல்லாந்து படுத்து கால்களையும், கைகளையும் அகட்டி வைக்கவும் கூடாது. இதனால், ஆக்சிஜன் கிடைக்காமல் போய்விடும். மேலும், குறட்டை தான் உண்டாகும்.

இடது கை கீழ் பகுதியிலும், வலது கை மேல் பகுதியிலும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து தூங்க வேண்டும்.

இதயத்திற்கு சீரான பிராண வாயு கிடைத்து இதயம் பலப்படும்.

இதுவே வலது பக்கம் ஒருக்களித்து தூங்குவதனால், இடது பக்க மூக்கு வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால், 12 அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால், உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவு நேரத்தில் சாப்பிடும் உணவு ஜீரணமாகாமல் விஷமாக நேரிடும்.

முன்னோர்கள் மட்டுமல்லாமல் சித்தர்கள் சொன்ன ஒவ்வொரு விளக்கமும் நமது நன்மைக்காக மட்டுமே. நம் வாழ்க்கை நம் கையில்… எப்போதும் நல்வழிகளை பின்பற்றி நன்மைகளை பெற்று நலமுடன் வாழ்க்கை வாழ வேண்டும்.