தெரிந்த கதை, தெரியாத காரணம் – தசரதருக்கு ஏன் 60,000 மனைவிகள் ?

45

இராமாயணத்தில் தசரதரை தெரியாமல் யாரும் இருக்க முடியாது . அவரிடம் பல நல்ல குணங்கள் இருந்தாலும் அதை பற்றி பேசாமல் அவரின் 60,000 மனைவிகளை பற்றி மட்டும் பேசி கிண்டல் செய்பவர்களும் உண்டு . அவருக்கு ஏன் இத்தனை மனைவிகள் என்று இந்த கட்டுரையில் காண்போம் . தசரதர் காலத்தில் தான் ஸ்வாமி பரசுராமர் வாழந்து வந்தார் , அவர் சிவ பெருமானிடம் வரம் பெற்று வைத்து இருந்த கோடரியின் மூலம் கையில் கிடைக்கும் சத்திர வம்சத்து அரசர்களை வதம் செய்து வந்தார் . அவரின் தந்தை ஜமதக்கினி முனிவரை கார்த்தவீர்யாஜுனன் எனும் மன்னன் காமதேனுவை அபகரிப்பதுக்கு கொன்றதால் அதற்கு பலி வாங்கும் நோக்கில் பல மன்னர்களை கொன்று குவித்து தீராத கோவத்தில் அலைந்து திரிந்தார்.

அதே காலா கட்டத்தில் அயோத்தியை ஆண்டு வந்த தசரதருக்கு இது பெரும் தலைவலியாக இருந்தது , பரசுராமரிடம் இருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்தார் . பரசுராமருக்கு ஒரு பழக்கம் உண்டு , யாரேனும் புது மண தம்பதிகளை பார்த்தால் உடனே ஆசி வழங்கிடுவார் . இதை காரணமாக கொண்டு பரசுராமர் தென்படும் பொது எல்லாம் ஒரு புது மனைவியிடம் தோன்றி அவரிடம் ஆசி பெற்று சண்டையில் இருந்து தப்பித்து கொள்வர் . தங்கள் மன்னனை காக்கும் பொருட்டு அயோத்தி மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரை பரசுராமர் வரும் பொழுது திருமணம் முடித்து கொடுத்து காப்பாற்றினார் . இதன் காரணமாகவே தசரதருக்கு 60,000 மனைவிகள் வந்ததாக ராமாயணம் குறிப்படுகிறது . பின்னர் இந்த பரசுராமரை ராமர் சந்தைப்படுத்தியதாக ராமாயணத்தின் பிற்பகுதியில் வரும் . அனைவரும் ராம நாமம் ஜபித்து , துன்பங்களில் இருந்து விடுபடுவோம் .