நட்சத்திரமும், வழிபட வேண்டிய கோயில்களும் ஒரு பார்வை!
- அசுவினி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் – நீங்கள் சனீஸ்வர பகவானை வணங்கி வருவது நல்லது. தொடர்ந்து திருநள்ளாறு சென்று வர உங்களுக்குத் திருப்பங்கள் பல கிடைக்கும்.
- பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – நீங்கள் மகா காளியை வணங்குவது நல்லது. திருவாலங்காடு சென்று வழிபட்டு வருவது திருப்பங்களை ஏற்படுத்தும்.
- கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – நீங்கள் ஆதிசேஷனை வணங்குவது நல்லது. திருநாகை சென்று வழிபட்டு வருதல் நலம் தரும்.
- ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – நாகநாதசுவாமியை வழிபடுவது நன்மையை செய்யும். ஒரு முறையேனும் திருநாகேஸ்வரம் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
- மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – துர்காதேவியை வழிபட்டு வர நன்மைகள் மேலோங்கும். ஒருமுறையேனும் கதிராமங்கலம் சென்று வருதல் பல நன்மைகளை செய்யும்.
- திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – சனீஸ்வரரை வழிபட்டு வர நன்மைகள் நடந்தேறும். ஒரு முறையேனும் திருநள்ளாறு சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
- புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – தென்முகக் கடவுளை வழிபட நன்மைகள் மேலோங்கும். ஒரு முறையேனும் ஆலங்குடி சென்று வர நன்மை உண்டு.
- பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – சனீஸ்வரரை வழிபட நன்மைகள் மேலோங்கும். குச்சனூர் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள்.
- ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – சனீஸ்வரரை வழிபட நன்மைகள் மேலோங்கும். ஒரு முறையேனும் திருப்பரங்குன்றம் சென்று வர வாழ்வில் நல்ல திருப்பங்களை சந்திப்பீர்கள்.
- மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – தில்லை காளியை வழிபட வாழ்வில் பல நன்மைகள் மேலோங்கும். ஒரு முறை யேனும் சிதம்பரம் சென்று வருதல் நலம் தரும்.
- பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – ராகுபகவானை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையேனும் திருமணஞ்சேரி சென்று வருதல் பல நன்மைகளை செய்யும்.
- உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – வாஞ்சியம்மனை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையேனும் மூவனூர் சென்று வருதல் நலம் தரும்.
- அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – ராஜதுர்கையை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவாரூர் சென்று வருதல் நலம் தரும்.
- சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – ராஜதுர்கையை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவாரூர் சென்று வருதல் நலம் தரும்.
- சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – சனீஸ்வரரை வழிபட நன்மைகள் உண்டு. ஒரு முறையாவது திருவானைக்காவல் சென்று வருதல் நலம் தரும்.
- விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – சனீஸ்வரரை வழிபட நன்மை உண்டு. ஒரு முறையேனும் சோழவந்தான் சென்று வருதல் நலம் தரும்.
- அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – ஸ்ரீ மூகாம்பிகையை வழிபட்டு வர நன்மை உண்டு. ஒரு முறையேனும் திருவிடைமருதூர் சென்று வருதல் நலம்.
- கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை வணங்கி வருதல் நலம். ஒரு முறையேனும் பல்லடம் கோயில் சென்று தரிசித்து வருவது நலம் தரும்.
- மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – தென்முகக் கடவுளை வணங்கி வருவது நல்லது. ஒரு முறையேனும் மதுரை சென்று சொக்கநாதரை வழிபட்டு வாருங்கள்.
- பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – தென்முகக் கடவுளான தட்சிணா மூர்த்தியை வணங்குவது நன்மை தரும். ஒரு முறையேனும் திருநாவலூர் சென்று வாருங்கள் நன்மை உண்டு.
- உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – தட்சிணாமூர்த்தியையும், துர்காதேவியையும் வணங்குவது நன்மை தரும். ஒரு முறையேனும் தர்மபுரம் கோயிலுக்கு சென்று வருதல் நலம் தரும்.
- திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – ராஜகாளியம்மனை வணங்குவது நன்மை தரும். ஒரு முறையேனும் தெத்துப்பட்டி சென்று வருதல் நலம் தரும்.
- அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – சனி, நாகராஜன் ஆகிய இந்த இரு தெய்வங்களையும் நீங்கள் வணங்குவது நன்மை தரும். முடிந்தால் ஒரு முறை கொடுமுடி சென்று வருதல் நலம்.
- சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – சனி, நாகராஜன் ஆகிய இந்த இரு தெய்வங்களையும் வணங்குவது நலம் தரும். முடிந்தால் திருச்செங்கோடு சென்று வழிபட்டு வரவும்.
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – ஆதிசேஷன், சித்ரகுப்தர் ஆகிய இவர்களை வணங்குவது நலம் தரும். முடிந்தால் திருவையாறு கோயில் சென்று வணங்கி விட்டு வாருங்கள்.
- உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – சனி, தக்ஷிணாமூர்த்தி ஆகிய இவர்கள் இருவரையும் வணங்குவது நல்லது. முடிந்தால் திருவையாறு சென்று இறைவனை வழிபட்டு வாருங்கள்.
- ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – சனீஸ்வரரை வழிபடுவது நல்லது. முடிந்தால் ஓமாம்புலியூர் கோயிலுக்கு சென்று வருதல் நலம் தரும்.