நந்தி மாதிரி குறுக்கே நிற்காதேன்னு சொல்லலாமா?

127

நந்தி மாதிரி குறுக்கே நிற்காதேன்னு சொல்லலாமா?

பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் சிவபெருமானை பார்த்தவாறு, நந்தி பகவான் இருப்பார். சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள். அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும். கோயிலுக்குள் நுழைவதற்கு முன்னால், நந்தி பகவானிடம் அவருக்கு பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும். அதன் பின்பு, நந்திக்கு முன்பு பக்கவாட்டில் நின்று உள்ளே சென்று சிவனை தரிசிப்பதற்கு அனுமதி வேண்டி அதன் பிறகு தான் சிவனை பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பிரதோஷ நாட்களில் சிவனுக்கு எப்படி அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்படுகிறோ, அதே போன்று நந்தி பகவானுக்கும் செய்யப்படும். நந்தி(காளை), சிவபெருமானின் வாகனம். சிலாத முனிவருக்கு சிவனின் அருளால் கிடைத்த வரம் 4 கால்களுடன் கூடிய செப்பேசன். அனைத்து கலைகளிலும் வல்லவரான செப்பேசன், ஆழ்ந்த சிவ சிந்தனையில் இருந்த போது தான் ஏன், இப்படிப்பட்ட ஒரு சாபம் பெற்றதற்கான காரணம் குறித்து யோசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, சிவனுடைய அந்தரங்க காவலராக இருந்ததும், ஆடி என்ற அசுரை சிவனின் உத்தரவு இல்லாமல் அனுப்பியதால், அவரால் சபிக்கப்பட்டு இந்தப் பூமியில் பிறந்தது நினைவுக்கு வந்துள்ளது. அதன் பிறகு சிவபெருமானை நினைத்து ஒற்றைக் காலில் கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தால் மனமகிழ்ந்த சிவபெருமான், அவரது முன் தோன்றினார்.

அப்போது, சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், இறைவியின் கொங்கை நீர், கங்கை நீர், இடப வாய்நுரை நீர் ஆகிய 5 வகையான தீர்த்தங்களால் அபிஷேகம் செய்ததோடு தங்கப்பட்டம் அணிவித்து நந்தீஸ்வரர் என்று பெயர் சூட்டினார். அதோடு, தமக்கு சமமான அனைத்து அதிகாரத்தையும், முதல் குருநாதன் என்ற தகுதியினையும், சிவ கணங்களுக்கு தலைமை தாங்கும் பதவியினையும், நந்தீஸ்வரருக்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதிலிருந்து அன்று முதல் சிவனை விட்டு நீங்காமல் அவருடன் அவரது வாகனமாக வலம் வந்தார். அதனால், நந்தி தேவர் என்றும் அழைக்கப்பட்டார்.

நந்தி தேவருக்கு சுயம்பிரகாசை என்ற பெண்ணை திருமணமும் செய்து வைத்தார். நந்தி தேவரின் கால்கள் சமம், விசாரம், சந்தோஷம் மற்றும் சாதுசங்கமம் ஆகிய 4 விதமான குணங்களை வெளிப்படுத்துகிறது. தூய்மையான வெண்மை நிறம் கொண்ட நந்திதேவர், அகம்படியர் என்ற சைவம் இனத்தைச் சேர்ந்தவர். அகம்படியர் என்றால் காவல் என்ற பொருள் உண்டு. இதனால், தான் சிவன் கோயில்களில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார்.

பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக, தீமைகள் அதிகமாக இருக்கும் என்பதால், நந்தி தேவரின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார். இனிமேல், யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்று கொண்டிருந்தால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று சொல்லாதீர்கள்.

அப்படி நீங்கள் சொன்னாலும், அவர்கள் உங்காளை காப்பவர் என்று சொல்லாமல், சொல்வதாகத்தான் பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.