நவக்கிரக தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

42

நவக்கிரக தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

தஞ்சாவூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் பகுதியில் உள்ள அரதைபெரும்பாழி பாதாளேசுவரர் கோயில். இந்தக் கோயில் கும்பகோணத்திலிருந்து 22 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தல இறைவன் பாதாளேசுவரர் என்றும், அம்மையார் அலங்காரநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தலம் வன்னி வனம் ஆகும். திருமால் மற்றும் பிரம்மாவுக்கு இடையில் யார் பெரியவர் என்ற போட்டியில் திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை தோண்டி சிவனின் திருவடியை காண முயன்றார்.

வராக அவதாரம் எடுத்த திருமால், சிவனின் திருவடியை காண முயன்ற தோண்டிய பள்ளமானது இத்தலத்தில் காணப்படுகிறாது. அரி என்னும் திருமால், பூமியை துவாரமிட்ட இடம் என்பதால், இந்த இடம் அரித்துவாரமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தக் கோயிலில் சிவபெருமானே நவக்கிரகங்களுக்கு அதிபதியாக திகழ்வதால், நவக்கிரகங்களுக்கு என்று தனி சன்னதி கிடையாது. ஆதலால், இத்தலத்தில் சிவபெருமானை வணங்கி வழிபட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் யாவும் நீங்கப் பெரும் என்பது ஐதீகம். அதோடு, கடன் பிரச்சனையும் தீரும்.