நாம் தூங்கும் போர்வையை ஏன் மடித்து வைக்க வேண்டும் தெரியுமா?

126

நாம் தூங்கும் போர்வையை ஏன் மடித்து வைக்க வேண்டும் தெரியுமா?

நாம் தூங்கும் போர்வையை பல வேளைகளிலும் ஒழுங்காக மடித்து வைப்பதில்லை. ஆனால் மடித்து வைக்க வேண்டும் என்று நம் முதியோர்கள் கூறுவார்கள். இதற்கு பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது. அந்த ரகசியத்தை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நாம் படுக்கையும், போர்வையும் மடித்து வைக்காமல் இருக்கும்போது நம்மை அறியாமலே மிதித்து விடுவோம். நாம் மிதித்த இந்த படுக்கையை நாம் சுத்தம் செய்யாமல் அதன் மேல் தூங்க நிச்சயமாக அவருடைய ஆரோக்கியத்திற்கும், மன நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வசதிகள் குறைவும் பிள்ளைகள் அதிகமாகவும் உள்ள பழம்காலத்தில் தூங்குவதர்கென்று தனியாக வசதிகள் கிடையாது. அனைவரும் ஒரே இடத்தில் படுத்திருப்பார்கள். ஒருவர் தொடர்ந்து ஒரு இடத்தில் அதிக நேரம் இருக்கும்போது அவர்கள் இருந்த அந்த இடத்தில், அவருடைய ஒளி மற்றும் உடலின் தன்மை அந்த இடத்தில் இருக்கும். இதை விலங்குகள் கூட உணரும் சக்தி இருக்கிறது.

நாம் ஒரு இடத்தில் கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு பின் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாலும் அங்கு வரும் விலங்குகள் இங்கு யாரோ சிறிது நேரத்திற்கு முன்னால் இருந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்கின்றன. இதை அங்கிருக்கும் அதிர்வுகளை வைத்தும், வாசனை மூலமும் தெரிந்து கொள்கின்றன. இதை ஒரு மனிதனாலும் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆகவே படுக்கையில் ஒருவர் தொடர்ந்து ஏழு மணி நேரம் இருப்பதால் படுக்கையிலிருந்து எழுந்த பிறகும், அவருடைய ஒளி உடலின் தன்மை அந்தப் படுக்கையில் இருக்கும். ஆகவே நாம் மடித்தது வைகாமல் இருக்கும் போது மற்றவர்கள் இதை மிதித்து போடுவார்கள். இந்த நிலையில், அதே படுக்கையில் நாம் மறுபடியும் செல்லும் போது நிச்சயமாக அவருடைய மன நலனுக்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கை உருவாக்கும். மேலும் அவருடைய உடலும், அந்த படுகையில் எளிதாக ஒத்துப்போகாது.

உதாரணமாக நாம் புதிதாக நம் சொந்தகாரர்கள் வீடுகளுக்கு செல்லும் போது எல்லா வசதிகளும் இருந்தாலும் நமக்கு படுத்ததும் தூக்கம் வராது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஏனெனில் உங்கள் உடல் அங்கிருக்கும் தன்மையுடன் ஒத்து வரவில்லையென்றால் உங்கள் உடல் அங்கு நன்கு இருக்காது. தேவையற்ற சிந்தனைகள் நம்மை ஆட்கொள்ளும்.

ஆனால் படுக்கையை மடக்கி வைத்து பயன்படுத்தும் போது உங்கள் படுக்கையின் தன்மை மற்றவர்களால் பாதிக்கப்படாமல் இருப்பதால், படுத்தவுடனேயே உங்கள் உடல் படுக்கையில் ஒத்துப்போகும். உடல், மனம் ஆகிய இரண்டுமே சுகமாக இருக்கும். இப்போது எல்லா வீடுகளிலும் பெட் ரூம் வந்துவிட்டது.

அனைவரும் மெத்தை போட்டுப் தூங்கி வருகிறார்கள். அந்த மெத்தையையும் சுற்றி வைத்தால் நல்லது. அப்படி மெத்தையைச் சுற்றி வைக்க முடியவில்லை என்றால் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் ஒரு துணி போட்டு மூடிப்போடுங்கள். இப்படி நாம் செய்தால் நம் மனநிலை மற்றும் ஆரோக்கியத்தைத் நோயில்லாமல் பாதுகாக்கலாம்.