நாலு (4)ல்ல என்ன தான் இருக்கு?

39

நாலு (4)ல்ல என்ன தான் இருக்கு?

அப்படி இந்த நாலு (4)ல்ல என்னதான் இருக்கு?

  1. நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க…
  2. நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல…
  3. நாலும் தெரிஞ்சவரு நாலும் புரிஞ்சவரு…
  4. நாலு காசு சம்பாதிக்க நாச்சும் படிக்கணும்…
  5. நாலு ஊரு சுற்றினாத்தான் உலகம் புரியும்…
  6. நாலு வார்த்தை நறுக்குன்னு நல்லா கேக்கணும்…
  7. பொறந்தாலும் நாலு பேர் வேணும், செத்தாலும் நாலு பேர் வேணும்…

ஏன் இந்த நாலுக்கு மட்டும் இவ்வளவு ஸ்பெஷல் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்…

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு, நாற்பது, எட்டுத்தொகையில் நானூறு, பிரபந்தத்தில் நாலாயிரம் என்று நான்கு வரும். நான்மணிக்கடிகை, நாலடியார், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, புற நானூறு, நாலாயிர திவ்ய பிரபந்தம், அகநானூறு…

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்…

இது நல்வழி ஔவை பாட்டி இயற்றிய தமிழ் நீதி நூல். பல நல்வழிகளை இந்த நூல் எடுத்துரைப்பதால் இந்த பெயர் பெற்றது. ஆலும், வேலும் பல்லுக்குறுதி, நாலும், இரண்டும் சொல்லுக்குறுதி….இதில் நாலு என்பது நாலடியார்.

நமச்சிவாயத் திருப்பதிகம் மூன்றாம் திருமுறை:

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயவே.

நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்கும் சிவபெருமான்…

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் தான் சைவ நெறிகளைப் பரப்பிய நாயன்மார்களில் மிகவும் முதன்மையானவர்கள்.

ரிக், யஜூர், சாம, அதர்வண என்ற 4 வேதங்கள்…

தசரதனுக்கு இராமன், பரதன், இலக்குவண், சத்துருக்கனன் என்ற 4 மகன்கள்…

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் கடக்க வேண்டிய நிலைகளும் நான்கு…

பிரம்மசர்யம் , கிருஹஸ்தாச்ரமம்  வானப்ரஸ்தம், சந்யாசம்…

பிரம்மாவின் தலைகளும் நான்கு. சதுர்முகன் என்ற பெயர் கொண்டவர் பிரம்மன்…

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று திசைகளோ நான்கு….

தேர், யானை, குதிரை, காலாட்படை (ரத, கஜ, துரக, பதாதி) என்று நான்கு வகைப் படைகள்…

அஹம் பிரம்மாஸ்மி…

பிரக்ஞானம் பிரம்ம…

அயம் ஆத்மா பிரம்ம…

தத் த்வம் அஸி…

ஆகியவை உபநிடதங்களில் கூறப்படும் நான்கு மஹா வாக்கியங்கள்.

கிரதம், திரேதம், துவாபரம், கலி என்று யுகங்களும் நான்கு

பெண்ணின் நால்வகை குணங்கள்: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு…

சிவராத்ரியில் நாலு கால பூஜை நடக்கும்…

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். இதனால் தான் நாலு என்பது இவ்வளவு சிறப்பு பெயர் பெற்றது. நாலு சினிமாவிலும் சொல்லப்பட்டு வருகிறது. வாழ்க்கையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.