நிகழ்காலத்தைக் குறிக்கும் வர்த்தமானேசுவரர் கோயில்!

44

நிகழ்காலத்தைக் குறிக்கும் வர்த்தமானேசுவரர் கோயில்!

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூர் என்ற ஊரில் உள்ள கோயில் வர்த்தமானேஸ்வரர். இந்தக் கோயிலில் வர்த்தமானேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். கருந்தார் குழலி, சூளிகாம்பாள் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

வைகாசி மாதம் – வைகாசி பூர்ணிமா – பிரம்மோற்சவம் 10 நாட்கள் திருவிழா அன்றைய நாளில் சந்திரசேகரர் அக்னி பகவானுக்கு காட்சி அளித்தல் நிகழும். மாதம் தோறும் முக்கிய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளில் 10 நாட்கள் அப்பர் பக்தோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும் திருவிழா ஆகும்.

தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இது தவிர பிரதோஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் கோயிலில் அலைமோதும் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். திருநாவுக்கரசர் முக்தி அடைந்த தலம், முருக நாயனார் அவதரித்த தலம்.

அக்னி பகவானுக்கு இந்தக் கோயிலில் உருவம் உண்டு. 7 சுடர்கள் 5 கரங்கள் 3 கால்கள் கொண்டவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்ரகம் மிகவும் அபூர்வமானது.

வாஸ்து தோஷம் நீங்க:

இங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வீடு சிறந்த வாழ்க்கைத்துணை, நல்ல குழந்தைகள் என அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். புதிய வீடு கட்டுபவர்கள், மூன்று செயல்களை பூஜித்து எடுத்து சென்று ஈசான மூலை, அக்னி மூலை, பூஜையறையில் தலா ஒரு செங்கல் வீதம் வைத்து வீடு கட்டுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. ஆகையால், இத்தல இறைவன் வாஸ்துநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

சுகப்பிரசவம்:

இங்குள்ள அம்பாளுக்கு கருந்தார்குழலி என்றும், சூலிகாம்பாள் என்றும் பெயர். இவள் தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்த்ததாக வரலாறு உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத் தடை ஏற்படும் பெண்கள் இங்குள்ள அம்பாளை வழிபட அருள்பார்வை கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட அம்பாளை வழிபட்டு பயன் அடையலாம். திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு வெள்ளைப்புடவை சாற்றி வழிபாடு செய்ய திருமணம் கைகூடுவதாக நம்பிக்கையுள்ளது.

திருமணம் வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாற்றி அர்ச்சனை செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துதலும், அபிஷேகம் செய்தலும் சந்தனக் காப்பு சாத்தலும் பக்தர்களின் முக்கியமான நேர்த்திக்கடனாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, இளநீர், தைலம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம்.

தல  பெருமை:

அப்பர் முக்தி அடைந்த தலம்:

அப்பர் சுவாமிகள் தனது 81ஆவது வயதில் இத்தலத்தில் பணி செய்து பெண், பொன் மற்றும் மண்ணாசை ஆகியவற்றிற்கு அப்பால் நின்று முக்தி அடைந்த தலம். இந்தக் கோயிலில் சுந்தர் மற்றும் திருநாவுக்கரசர் பாடிய இரு சன்னதிகள் உள்ளது. ஒரு சன்னதிக்குள்ளாக இறைவன் அக்னீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இவருக்கு, சரண்யபுரீஸ்வரர், பிரத்தியக்‌ஷ வரதர், கோணபுரான் ஆகிய பெயர்களும் உண்டு. இத்தல இறைவி கருந்தார் குழலி. இவள் சூளிகாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள். இந்தக் கோயிலில் மற்றொரு சன்னதியில் வர்த்மானேஸ்வரர் காட்சி தருகிறார். இறைவி மனோன்மணி அம்மை.

பாவ விமோட்சனம் பெற்ற அக்னி பகவான்:

அக்னி பகவான் தவம் புரிந்து இத்தலத்தில் பாவ விமோட்சனம் பெற்றார். இந்தக் கோயிலில் இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் அக்னி பகவானுக்கு இந்தக் கோயிலில் உருவம் உண்டு. அக்னி பகவானுக்கு 2 முகம், 7 கைகள், 4 கொம்புகள், 3 பாதங்கள் மற்றும் 7 ஜூவலைகள் கொண்ட உருவத்தில் அக்னி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இத்தல இறைவனான அக்னிபுரீஸ்வரர், சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த கோயில் இது. இதன் காரணமாக புதிய வீடு கட்டுபவர்கள் செங்கற்களை வைத்து பூஜை செய்து வாஸ்து முறைப்படி வீடு கட்டி வருகின்றனர். வாஸ்து பூஜைக்கு இந்தக் கோயில் மிகவும் பிரசித்த பெற்ற தலமாகும்.

கருந்தார்குழலி:

கருந்தார் குழலி அம்மன், பெண் ஒருவருக்கு தானே பிரசவம் பார்த்ததாக புராணங்களில் சொல்லப்பட்டதோடு, அதற்கு கூலியாக நிலத்தையும் பெற்றிருக்கிறாள். இதனால், சூலிகாம்பாள் என்ற பெயர் பெற்று பின்னர் சூளிகாம்பாள் என்று அழைக்கப்பட்டாள். கருந்தார் குழலி இருக்கும் பகுதியில் பிரசவித்தால் அவர்களுக்கு இறப்பே ஏற்படாது என்பது ஐதீகம்.

சனீஸ்வர பகவான்:

சனீஸ்வர பகவானுக்கும், நளச்சக்கரவர்த்திக்கும் ஒரே கோயில். பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த நளச்சக்கரவர்த்தி, 7 கல் தொலைவிலுள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆதலால், இத்தல சனீஸ்வர பகவானுக்கு அனுகிரக சனீஸ்வர பகவான் என்ற பெயர் உண்டு.

இந்தக் கோயிலில் கடந்த காலத்தைக் குறிக்கும் பூதேசுவரர், நிகழ்காலத்தைக் குறிக்கும் வர்த்தமானேசுவரர், வருங்காலத்தைக் குறிக்கும் பவிஷ்யேசுவரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் உள்ள விநாயகர் ஞான விநாயகர் என்று போற்றப்படுகிறார். திருமுகாசூரஜ் 3 முகங்களை உடையவர். மனித முகம், பட்சி முகம் மற்றும் பன்றி முகம் கொண்டு காணப்படுகிறார். தேவர்கள் அசுரர்களுக்கு பயந்து தஞ்சமடைந்த தல என்பதால், இது புகழூர் என்று பெயர் பெற்றது.

தல வரலாறு:

பாணாசுரனின் தாயார் மாதினியார். இவர் அசுர வம்சத்தைச் சேர்ந்தவர். சிவபெருமான் மீது அதிக பற்று கொண்டவர். இதன் காரணமாக மாதினியார் இருக்கும் இடத்திற்கே தினமும் லிங்கங்களை கொண்டு வந்து சேர்ப்பதை தனது வேலையாக கொண்டு வந்தான் பாணாசுரன். ஒருநாள் விண்ணில் பறந்து கொண்டிருந்த போது ஒரு இடத்தில் ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில் உள்ள ஒரு லிங்கத்தின் அமைப்பானது அவனை வெகுவாக ஈர்த்தது.

இதைக் கொண்டு சென்றால் தனது தாயார் மகிழ்வாள் என்று கருதிய பாணாசுரன், லிங்கத்தை எடுக்க முயன்றான். ஆனால், எடுக்க முடியவில்லை. எனினும், விடாமல் லிங்கத்தைச் சுற்றிலும் அகழி தோண்டி பெயர்த்தெடுக்க முயற்சித்தான். ஆனால், அகழியில் தண்ணீர் நிரம்பி லிங்கத்திற்கு அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், மனம் வருந்த பாணாசுரன், இறைவா, இதென்ன சோதனை! எனது தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நான் இனியும் உயிர் வாழ்ந்து பயனில்லை என்று கூறி தனது வாளை எடுத்து தலையை அறுக்க முயற்சித்தான். அப்போது அசரீரி ஒலிதத்து. பாணாசுரனே! உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என்றது.

அப்போது லிங்கத்தின் மீது ஒரு புன்னை மலர் பறந்து வந்து அமர்ந்தது. இதையடுத்து அந்த அசரீரி மறைந்தது. அது மாதினியாரின் இருப்பிடத்திற்கு செல்லவே பூஜை செய்து மகிழ்ந்தாள். பூஜை முடிந்த பிறகு அந்த லிங்கம் திருப்புகலூருக்கு திரும்பி சென்றுவிட்டது. இப்படி பக்தர்கள் நினைக்கும் இடத்திற்கு ஓடி வந்து அருள் செய்யும் இறைவனுக்கு அக்னிபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது.