நினைத்த காரியம் நிறைவேற ஸ்ரீ ராகவேந்திரர் வழிபாடு!

169

நினைத்த காரியம் நிறைவேற ஸ்ரீ ராகவேந்திரர் வழிபாடு!

ராகவேந்திர சுவாமிகள் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். ராகவேந்திரரை வழிபடும் பக்தர்களுக்கு இன்றும் அருளும், ஆசியும் புரிந்து கொண்டிருப்பதாக அவரை பின்பற்றும் பக்தர்கள் நம்புகின்றனர். இவ்வளவு ஏன், ரஜினிகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் ஸ்ரீ ராகவேந்திரரை வழிபாடு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா மாநிலம், மந்திராலயம் என்ற இடத்திலுள்ள பிருந்தானவத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் உயிருடன் ஜீவ சமாதி நிலையை அடைந்தார். ஸ்ரீ ராகவேந்திரருக்கு விரதம் மேற்கொள்ள வாரந்தோறும் வரும் வியாழக்கிமை உகந்த நாளாகும். வியாழக்கிழமை அன்று குரு ஹோரை நேரத்தில் ஸ்ரீ ராகவேந்திரரை வணங்க உகந்த நேரமாகும்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜையறையில் விளக்கேற்றி பூஜைக்குரிய பழங்கள், வெற்றிலை, பாக்கி, தேங்காய் என்று வாங்கி ஸ்ரீ ராகவேந்திரர் படத்தை வைத்து வணங்க வேண்டும். அதற்கு முன்னதாக உங்களது குல தெய்வத்தை வணங்கி, பிள்ளையார் பிடித்து அதற்கு சந்தனம், குங்கமம் வைத்து வழிபட வேண்டும். அப்போது ஸ்ரீ ராகவேந்திரர் மந்திரத்தை சொல்லி பூஜையை செய்யலாம்.

ஸ்ரீ ராகவேந்திரர் மந்திரம்:

பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய சத்ய தர்ம

ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய

நமதாம் ஸ்ரீ காம தேநுவே

என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே ராகவேந்திரர் படத்தையும், குத்துவிளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறை வலம் வரும் போது இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். முழு மனதாக அவரை வழிபட்டு வணங்கி வர அவர் உங்களது கனவில் வந்து அருள் புரிவார் என்பது நம்பிக்கை.

இது போன்று தொடர்ந்து 6 வியாழக்கிழமைகள் செய்து ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட்டு வர வேண்டும். 7ஆவது வாரத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு பழங்கள், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி நாம் பூஜை செய்து ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.