நிலம் வாங்கி வீடு கட்டுவது நல்லதா? இல்லை கட்டிய வீடு வாங்குவது நல்லதா?

80

நிலம் வாங்கி வீடு கட்டுவது நல்லதா? இல்லை கட்டிய வீடு வாங்குவது நல்லதா?

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமாக வீடு கட்டி மனைவி, பிள்ளைகள், பேரக் குழந்தைகள் என்று குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ ஆசைப்படுவது உண்டு. சொந்தமாக வீடு இருந்தால் தான் கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ முடியும். பெரிய பெரிய வேலையில் அதிக சம்பளம் வாங்குபவர்களால் மட்டுமே சொந்தமாக நிலம் வாங்கி குவிக்க முடியும்.

சாதாரண வேலை பார்த்துக் கொண்டு குடும்பத்தை நடத்தும் நடுத்தர வர்க்கத்தினர் சொந்தமாக நிலமோ அல்லது வீடோ வாங்க வேண்டுமென்றால் அதற்கு கை நிறைய பணம் தேவைப்படும். ஒரு சிலருக்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இன்னும் சிலருக்கு நிலத்தை வாங்கி அதில் புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசை இருக்கும். இந்த இரண்டில் எது நமக்கு லாபம் தரும்? எது சிறந்த பலன் தரும் என்று யாருக்கும் தெரிவதில்லை. அது குறித்து முழுமையாக தெரிந்து கொள்வதுமில்லை.

பெரும்பாலானோர் சொந்தமாக நிலம் வாங்கி அதில் புதிதாக வீடு கட்டுவதைத் தான் விரும்புகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு மண்ணால் கட்டப்பட்ட சுவர் இருக்கும் வீடுகளை வாங்குவதில் யாருக்கும் விருப்பமில்லை. 20 வருடங்களுக்கு முன்பு யாரோ ஒருவர் கட்டிய வீட்டை வாங்கிவிட்டு அது கன மழை பெய்யும் பொழுது இடிந்து விழுந்து விட்டால் என்ன செய்வது என்று சிலர் பயப்படுகின்றனர்.

இதனால், புதிதாக வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், உண்மையில், புதிதாக நிலம் வாங்கி அதில், வீடு கட்டுவதை விட ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீட்டை வாங்குவது தான் சிறந்தது. புதிதாக நிலம் வாங்கி அதில் வீடு கட்டுவதற்கு ஆகும் செலவை விட, கட்டிய வீட்டை வாங்குவதற்கு ஆகும் செலவு கம்மி தான்.

பழைய வீடாக இருந்தாலும் கூட அதனை ஆய்வாளர்கள் வைத்து ஆராய்ந்து அதன் பிறகு கட்டிய வீட்டை வாங்குவது சிறந்தது. ஏனென்றால் இடிந்து விழும் என்ற பயம் இருக்காது அல்லவா? பழைய வீட்டை வாங்கி புதுப்பித்துக் கொண்டால், அது புதிய வீடு போன்று தோன்றும்.

ஒரு சிலருக்கு பழைய வீட்டில் இருக்க இஷ்டமில்லை என்று நீங்கள் நினைத்தால் நிலமாக வாங்கி வீட்டை கட்டிக் கொள்ளலாம். எல்லாவற்றிலும் லாபமும் இருக்கும் நஷ்டமும் இருக்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் நிலம் வாங்கி வீடு கட்டுவது பெரிய அந்தஸ்து உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். ஆனால், சாதாரண நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு வீடாக வாங்கி அதில் பராமத்து பணிகள் மேற்கொண்டு குடி போவது தான் சிறந்ததாக இருக்கும். அப்படியும் இல்லையென்றால் புதிதாக கட்டிய வீட்டை வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளலாம்.

ஆகையால், நிலம் வாங்கி வீடு கட்டுவதா? அல்லது கட்டை வீட்டை வாங்கிக் கொள்வதா? என்று நீங்களே நன்கு யோசித்து எந்த முடிவையும் எடுத்துக் கொள்ளுங்கள். அதுவும், நிலமோ அல்லது வீடோ வாங்குவதற்கு அதிகமாக கடனும் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதன் பிறகு அந்த கடனை அடைப்பதற்கே உங்களது வாழ்நாள் முழுவதும் செல்வாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.