நோயை குணமாக்கும் அம்மன் சாம்பார் சாதம்!

79

நோயை குணமாக்கும் அம்மன் சாம்பார் சாதம்!

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டால் அனைத்து வியாதிகளும் குணமாகும் என்பது ஐதீகம்.

ஒவ்வொருவரது வாழ்க்கையில் நாம் தெரிந்தும், தெரியாமலும் பாவங்களை செய்து வருகிறோம். பொது நலத்தோடு வாழும் காலம் போய் சுயநலத்துடன் வாழும் காலம் வந்துவிட்டது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. நாம் செய்த பாவ வினைகளிலிருந்து விடுபட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரங்கணி முத்துமாலை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மனமுருக வேண்டினால் பாவ விமோட்சனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த கோயிலின் வளாகத்தில் வீடு ஒன்றும் உள்ளது. அதனை கோயில் வீடு என்பர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை தோறும் தாமிரபரணி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருவார்கள். அந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து பூஜை செய்வார்கள். வாரந்தோறும் செவ்வாய் கிழமை அன்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்களாம்.

அவர்கள் மீது சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை தெளிப்பார்கள். அதுமட்டுமல்லாமல், அன்று பிற்பகலில் சாம்பார் சாதம் செய்வார்களாம். அதனை பனை ஓலையில் செய்த பட்டையில் அம்மனுக்கு படைத்துவிட்டு அபிஷேகம் செய்து பின்னர் நோய்வாய்பட்டவர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்களாம். அப்படி அவர்கள் சாப்பிட்டால் அவர்களது நோய் குணமாகும் என்பது ஐதீகம்.

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆடி மாதம் இந்த கோயிலில் சிறப்பு விஷேசங்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.