பணக்கஷ்டம் தீர இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்!

176

பணக்கஷ்டம் தீர இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்!

இந்துக்கள் பொதுவாக வீடுகளில் தினமும் விளக்கேற்றி கடவுளை வழிபடுவர். ஆனால் சிலர் தினமும் கடவுளை வழிபட்டாலும் பணக்கஷ்டமே குறையாமல் கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் அனுபவிப்பதாக கூறி புலம்பி தள்ளுவர். இப்படிப்பட்டவர்கள் பணக் கஷ்டத்திலிருந்து விலக எப்படி விளக்கேற்றுவது நல்லது என்று இந்த பதிவில் பார்கலாம்.

நம் வீட்டில் இந்த முறையில் விளக்கு ஏற்றி தினம்தோறும் வழிபடுவதன் மூலம் பணவரவிற்கு குறைவில்லாமல் நிறைவுடன் வாழலாம். இதற்கு தேவையான பொருள்கள் நான்கு. அதாவது விளக்கு, சிவப்பு திரி, நலணெய், கிராம்பு, பச்சை திரி பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு சிவப்பு திரியை பயன்படுத்துங்கள். ஏன்னென்றால் சிவப்பு திரிக்கு பணத்தை ஈர்க்க கூடிய சக்தி உண்டு.

அதுபோல கிராம்பும் பணத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. ஆகவே இந்த இரண்டு பொருள்களும் கலந்து தீபம் ஏற்றும் போது பணவரவு அதிகரிக்கும். இந்த தீபத்தை அகல் விளக்குகளில் ஏற்றலாம் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் காமாட்சி அம்மன் விளக்கு அல்லது மற்ற எந்த ஒரு முகம் கொண்ட விளக்காக இருந்தாலும் அந்த விளக்கில் ஏற்றி வைக்கலாம்.

இதனை காலை அல்லது மாலை ஆகிய இரண்டு வேளைகளில் ஏதாவது ஒரு நேரத்தில் கிழக்கு நோக்கி தீபத்தை ஏற்றி என் கணவருக்கு எந்த விதத்திலும் பணக்கஷ்டம் வரக்கூடாது என்று மனதில் நினைத்து குலதெய்வத்தையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ வழிபட்டால் பணம் எந்த வழியிலாவது வந்துக்கொண்டே இருக்கும்.

இப்படி தனியாக விளக்கு வைக்க முடியாதவர்கள் நீங்கள் தினமும் வைக்க கூடிய விளக்கில் எந்த விதமான கேடுகளும் இல்லாத இரண்டு கிராம்பை மட்டும் போட்டு தீபம் ஏற்றுங்கள். இப்படி ஏற்றிய கிராம்பை வாரத்திற்கு ஒருமுறை விளக்கை சுத்தம் செய்யும் போது மட்டும் மாற்றினால் பணவரவு அதிகரித்து குறைவில்லாமல் வாழலாம்.