பணப்பற்றாக்குறையா? அப்போ இதுதான் காரணம்!

140

பணப்பற்றாக்குறையா? அப்போ இதுதான் காரணம்!

பொதுவாக எல்லோரது வாழ்விலும் பிரச்சனை இருக்கும். அதிலும் ஒரு சிலருக்கு பிரச்சனை அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். ஏன், இப்படி வந்து கொண்டே இருக்கிறது என்று யோசிக்க கூட முடியாது. அந்தளவிற்கு தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால், சிலரது வீட்டு அமைப்பு, வீட்டில் உள்ள பொருட்கள் ஆகியவற்றின் மூலமாகக் கூட இது போன்ற பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இது போன்ற சில மாற்றங்களை செய்தால், பிரச்சனை வராது. பணப்பற்றாக்குறையும் இருக்காது என்பது பொதுவான தகவல். அது என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…

வாஸ்து சாஸ்திரப்படி மாற்ற வேண்டிய விஷயங்கள்:

தண்ணீர் குழாய்:

ஒரு சில வீடுகளில் தண்ணீர் குழாய் உடைந்திருக்கும். அதிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்கும். அதே போல, மழை பெய்திருந்தால், வீட்டின் சுவரில் ஈரப்பதம் இருக்கும். இது போன்ற பிரச்சனை வீடுகளில் இருந்தால், பணப்பற்றாக்குறை இருக்கும். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் அருள் கிடைக்காது. வீட்டிற்கு வர வேண்டிய லட்சுமி தேவியும் வராமல போய்விடும்.

காலணிகள்:

பொதுவாக அனைவரது வீடுகளிலும் வீட்டிற்கு வெளியில் தான் காலணிகள் இருக்கும். அது இருந்தாலும் கிழிந்த காலணிகளை ஒரு போதும் வீடுகளில் வைத்திருக்க கூடாது. கிழிந்த செப்பல், ஷூ போன்றவை இருப்பதினால் சனியின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். எனவே, வீடுகளில் கிழிந்த காலணிகள் இருந்தால் உடனடியாக அதனை குப்பைத் தொட்டியில் போட்டு விட வேண்டும். இல்லையென்றால், பணப்பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும்.

பழைய பொருட்கள்:

எப்போதும் நமக்கு தேவையில்லாத பொருட்களை வீடுகளில் வைத்திருப்போம். அதில் அளவுக்கு அதிகமாக ஒட்டடை சேர்ந்துவிடும். ஆனால், அதனை நாம் கண்டுகொள்ளவே மாட்டோம். எப்போதெல்லாம், தேவையில்லத பொருட்கள் வீடுகளில் சேர்கிறதோ, அப்போதெல்லாம் நமக்கு கஷ்டங்கள் வரப்போகிறது என்பது அர்த்தம். குப்பையும் சேர விடக்கூடாது.

பறவைகளின் கூடு:

பொதுவாக வீடுகளில் கூரைகளிலோ அல்லது மூலைகளிலோ பறவைகள் கூடு கட்டுவது வழக்கம். நாம், கட்டினால், கட்டட்டும் என்று சும்மாவிட்டு விடுவோம். ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின்படி, நன்மை கிடையாது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? ஒரு பறவையானது முட்டையிட்டு அந்த உடைந்துவிட்டால், அது நமக்கு பணப்பற்றாக்குறையை ஏற்படுத்தும். இதனால், பறவைகள் கூடு வீட்டிற்குள் இருக்க விடக்கூடாது.

உடைந்த பொருட்கள்:

எதுவும் வேணாம், வீட்டில் உடைந்த கண்ணாடி துண்டை நாம் முகம் பார்ப்பதற்கு பயன்படுத்தி வருவோம். இது ஒன்றே போதும். நமக்கு மன கஷ்டம், பணப் பிரச்சனை ஆகியவற்றை ஏற்படுத்தும். ஏனென்றால், வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் கண்ணாடி இவைகள் ராகுவை குறிப்பதால், மன வலிமை, பணப்பிரச்சனை ஏற்படுகிறது. இதே போன்று வீட்டின் சுவரில் விரிசல் இருந்தாலும் அது பிரச்சனையை ஏற்படுத்தும். விரிசல் இல்லாமல் சரி செய்தாலும், உடைந்த பொருட்களை வெளியில் தூக்கி எறிந்தாலும் சரி எந்தப் பிரச்சனையும் குறிப்பாக பணப்பிரச்சனை வராது.

கடிகாரம்

பேட்டரி தீர்ந்து போயிருக்கும் அல்லது ஓடாமல் இருக்கும் கடிகாரத்தை வீட்டில் மாட்டி வைத்திருக்க கூடாது. உடனே அதனை சரி செய்து விட வேண்டும். இல்லையென்றால், அதனை வெளியில் தூக்கி எறிந்துவிட்டு, புதிய கடிகாரம் வாங்கி மாட்டி விட வேண்டும். ஓடாத கடிகாரம் வீட்டில் இருந்தால் உங்களது வேலைகளில் பல தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும்.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இனிமேல் இப்படியெல்லாம் இருக்காமல் பார்த்துக் கொண்டால் பணப்பற்றாக்குறை வராது. அதோடு, கஷ்டங்களும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.