பயம், எதிரி தொல்லை நீங்க காளி வழிபாடு!

103

பயம், எதிரி தொல்லை நீங்க காளி வழிபாடு!

சக்தி வாய்ந்த உக்கிரமான தெய்வங்களில் காளி தேவியும் ஒன்று. காளி என்பதற்கு காலம் என்றும் கருப்பு என்றும் பெயர் உண்டு. காளனின் (ஈசன்) மனைவி தான் காளி. இவளே ஆதி பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள்.

காளி மந்திரம்:

ஓம் காளி நமஹ;

ஓம் மாகாளி நமஹ;

ஓம் ஜெய காளி நமஹ;

ஓம் உக்கிர காளி நமஹ;

ஓம் உத்தண்ட காளி நமஹ;

ஓம் ஓங்கார காளி நமஹ;

ஓம் ஆஙகார காளி நமஹ;

ஓம் ருத்ர காளி நமஹ;

ஓம் நீலி நமஹ;

ஓம் சூலி நமஹ;

ஓம் திரிசூலி நமஹ;

ஓம் முப்புரத்து நீலி நமஹ;

ஓம் சங்கரி நமஹ;

ஓம் பயங்கரி நமஹ;

ஓம் பூரணி நமஹ;

ஓம் காரணி நமஹ;

ஓம் மோஹினி நமஹ;

ஓம் யோகினி நமஹ;

ஓம் வர்த்தினி நமஹ;

ஓம் மஹிஷாசுர மர்த்தினி நமஹ;

ஓம் ஆனந்த ரூபிணி நமஹ;

ஓம் ராஜ சிம்மாஸினி நமஹ;

ஓம் பவானி நமஹ;

ஓம் பைரவி நமஹ;

ஓம் ஈஸ்வரி நமஹ;

ஓம் அகிலாண்டேசுவரி நமஹ;

ஓம் மந்தி தாரணி நமஹ;

ஓம் ராஜ ராஜேசுவரி நமஹ;

ஓம் காளி !

ஓம் மாகாளி ஓம் ஓம் மாகாளி ஸ்வாஹ!

அதிகாலை எழுந்து குளித்து முடித்து இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் எதிரிகள் தொல்லை இருக்கவே இருக்காது. வாழ்க்கையில் அடுத்தடுத்து முன்னேற்றம் உண்டாகும் என்பது ஐதீகம்.

மண்டை ஓட்டை கழுத்தில் மாலையாக அணிந்து பார்ப்பதற்கு ஆக்ரோஷமாக இருந்தாலும் காளியின் உள்ளம் எப்போதும் கருணை நிறைந்தது. அப்படிப்பட்ட காளியை பூஜித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினந்தோறும் சொல்லி வந்தால் எதிர்காலத்தில் நடக்கப் போவது முன் கூட்டியே தெரிந்து கொள்ளும் சக்தியை நம்மால் பெற இயலும் என்று நம்பப்படுகிறது.

காளி தேவி மூல மந்திரம்:

ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம்

தக்ஷிணே காளிகே

க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா

இந்த மந்திரத்தை முறையாக குருவிடம் சென்று கற்றுக் கொள்ள வேண்டும். அதோடு, மனமுருகி சரியான நேரத்தில் சரியான எண்ணிக்கையில் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் நாம் அறிந்து கொள்ளும் சக்தி கிடைக்கும்.

காளி வழிபாடு:

மண்டையோட்டை மாலையாக கொண்டு உக்கிரமாக இருக்கும் காளி தேவியை வழிபடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. முன்னோர்கள் செய்வ பாவ, புண்ணியங்கள், ஒருவரது கர்ம வினைகள் ஆகியவற்றின் காரணமாகவே நாம் காளி தேவியை வழிபடும் அற்புதமான வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட காளி தேவியை வழிபட்டால் நம்மை எந்த தீய சக்தியும் அண்டாது. மனம், உடல், ஆற்றல் எப்போதும் ஒருநிலையாக இருக்கும்

உக்கிரமாக இருக்கும் காளி தேவியை வீடுகளில் வைத்து வழிபட்டால் சில சங்கடங்கள் ஏற்படும். எனினும், மனதார காளி தேவியை வேண்டி வழிபட எப்போதும் நல்லதே நடக்கும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமையில் காளி தேவியை வழிபட வேண்டும். அன்று ராகு காலத்தில் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வாழ்வில் நிம்மதி பெருகும்.

அம்மனுக்கு பிடித்த மாதம் ஆடி மாதம். இந்த மாத த்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்யப்படும். இந்த மாதம் முழுவதும் காளி தேவிக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதி உண்டாகும்.

காளி தேவி வழிபாடு பலன்கள்:

வாழ்க்கையில் வாழும் போது நாம் சந்திக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், நாம் பல அதிசங்களை சந்திக்கத் தான் செய்கிறோம். அதில், பல இன்ப துன்பங்களை கடந்து வந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரது வாழ்விலும் வாழ்க்கை பல அனுபங்களை நமக்கு கற்றுத் தருகிறது.

சாதாரணம் மனிதர்களுக்கு தான் இதெல்லாம் ஆச்சரியம். ரிஷிகள், முனிவர்கள், குருமார்கள் என்று அனைவருக்கும் இது இறைவனின் திருவிளையாடல்கள் என்று புரியும்.

உலகத்தில் உயிருள்ள ஜீவராசிகள் ஆண், பெண் என்ற இரு பிரிவுகளால் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டுமே ஒன்றையொன்று தொடர்பு கொண்டுள்ளது. அது போன்று தான் இயற்கையில் நியதி, நீதியான பிறப்பு மற்றும் இறப்பு இந்த இரண்டுமே ஒன்று மற்றொன்றை ஈடு செய்கிறது. அதில், இறந்தவர்களை காலம் கடந்துவிட்டார் என்று கூறுகிறோம்.

இந்த காலம் தான் காளி என்ற தெய்வமாக வழிபடப்படுகிறது. காளியை வழிபட்ட வர, அவரது உக்கிரமான தோற்றம் மற்றவர்களுக்கு எப்படி பயத்தை கொடுக்கிறதோ அதே போன்று நம்மைப் பார்த்து மற்றவர்களுக்கும் பயத்தை கொடுக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும்.