பல்லி கத்தினால் நன்மை நடக்குமா? பல்லியின் மகத்துவம்!

39

பல்லி கத்தினால் நன்மை நடக்குமா? பல்லியின் மகத்துவம்!

சர்வ சாதாரணமாகவே வீடுகளில் பல்லி இருக்கும். அதனால், யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. கேது பகவானைக் குறிக்கும் பல்லி நமது மீது விழுந்தால் தான் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் சொல்வார்கள். மேலும், பத்தி கத்தினால் நன்மை உண்டாகும் என்றும், சில இடங்களில் கெட்ட து நடக்கும் என்று சொல்வார்கள். அது ஏன் அப்படி சொல்கிறார்கள்? எதை வைத்து சொல்கிறார்கள்? என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்ம்போம்.

எப்போதும், கடவுள் தன்னை நம்பி வரும் பக்தர்களிடம் நேரடியாக பேசுவது கிடையாது. அதற்கு பல உரையாடல் வழிகளை வைத்துள்ளார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதில் பல்லியும் ஒன்று. இதன் காரணமாக ஊர்வன வகையைச் சேர்ந்தவைகளில் பல்லிக்கு மட்டும் ஒலி எழுப்பும் சக்தியை இறைவன் கொடுத்துள்ளார். பல்லி தான் கடவுளின் தூதுவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இப்படி பல சிறப்புகள் வாய்ந்த பல்லியின் ஒவ்வொரு செயல்களுக்கும் பின் பல அர்த்தங்ன்கள் உள்ளது. அதில், சில இடங்களில் பல்லி சத்தம் போட்டால் நன்மை உண்டாகும் என்றும், சில இடங்களில் கெடுதல் நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பண்டைய காலத்தில் பல்லியை பற்றி படிப்பதற்கு கௌளி சாஸ்திரம் என்ற படிப்பு இருந்தது.

பல்லிக்கு சில சக்திகள் இருப்பதால் காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் கர்ப்ப கிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம் பெற்றிருக்கிறது. அதே போன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோயிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.